Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் ஐ.எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட நூறு பேர் கண்டுபிடிப்பு - அதிர்ச்சி தரும் உண்மை நிலவரங்கள்

கோவையில் ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசா தெரிவித்தனர்

கோவையில் ஐ.எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட நூறு பேர் கண்டுபிடிப்பு - அதிர்ச்சி தரும் உண்மை நிலவரங்கள்

KarthigaBy : Karthiga

  |  6 Nov 2022 12:30 PM GMT

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமேஷா முபின் இறந்தார். அவரது வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வெடி மருந்துகள், ஜிகாத் குறிப்புகள், ஐ.எஸ் வாசகங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். கார் வெடிப்பில் இருந்த ஜமேசா முபின் தனது செல்போனில் ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த வீடியோக்கள் வைத்துள்ளார். இதே போல கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கோவையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஒருவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் நூறுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் இயக்க வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் சில கொடூர காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதை அடுத்து கோவையில் ஐ.எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் உளவுத்துறையினர் ஈடுபட்டனர். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாநகரில் 70 பேர் முதல் 100 பேர் வரை செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது போலீசார் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். இதை அடுத்து அவர்களுக்கு உலாமாக்கள் உளவியல் நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


கேரள சரியில் உள்ள அசாருதீன் கார் வெடிப்பில் இருந்த ஜமேஷா மொபைல் உள்ளிட்டவர்கள் ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் இதில் ஜமேஷா மொபைல் வீட்டில் இருந்து ஐஎஸ் இயக்க கொடியில் உள்ள வாசகங்கள் அடங்கிய குறிப்புகள் சின்னங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவே இந்த ஐஏஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்க உள்ளோம். மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. ஐ.எஸ் இயக்கத்தில் மோசமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி நல்ல கருத்துக்களை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News