Kathir News
Begin typing your search above and press return to search.

100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள RSS.. பிரதமர் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வமான தருணம்..

100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள RSS.. பிரதமர் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வமான தருணம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Oct 2024 4:45 AM GMT

தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (RSS) இன்று 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மோகன் பகவத்தின் வீடியோ இணைப்பைப் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய உச்சகமான வாழ்த்துக்களை ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தெரிவித்து இருக்கிறார்.


இது தொடர்பாக சமூக வலைதள பக்கங்களில் பிரதமர் கூறும் போது, "தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் அதாவது ஆர்.எஸ்.எஸ் இன்று 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தொடர்ச்சியான பயணத்தின் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டும் அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், எல்லையற்ற நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னை பாரதத்திற்கான இந்த உறுதிப்பாடும் அர்ப்பணிப்பும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பதுடன், 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' நனவாக்குவதில் புதிய சக்தியையும் நிரப்பவிருக்கிறது. இன்று, விஜயதசமியின் புனிதத் தருணத்தில், மாண்புமிகு சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் பகவத் அவர்களின் உரையைக் கேட்க வேண்டும்" என கேட்டுக் கொண்டு உள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News