100 நாட்களுக்கு மேலாக சூர்யா ரசிகர்கள் செய்த உதவி குவியும் பாராட்டுக்கள்.!
100 நாட்களுக்கு மேலாக சூர்யா ரசிகர்கள் செய்த உதவி குவியும் பாராட்டுக்கள்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.இவர் தற்போது சுதா கே.பிரசாத் இயக்கத்தில் சூறரை போற்று படத்தில் நடித்து முடித்து படம் வெளிவர காத்திருக்கிறார்.மேலும் வாடிவாசல், அருவா, இரும்பு கை மாயாவி என மற்றும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர்களின் ரசிகர்கள் தனது நற்பணி மன்றம் மூலமாக பல நல்ல விஷயங்களை செய்வது வழக்கம் தான்.
இந்நிலையில் கொரானா ஊரடங்கு துவங்கிய பிறகு வடசென்னை மாவட்ட நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில் உள்ள திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட நகர்கலான பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார். மேலும் பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற உட்பட பகுதிகளில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நபர்களின் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு எந்த ரசிகர்களும் செய்யாத பெரும் முயற்சியையும் உதவி செய்யும் நோக்கத்தில் நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக உதவி செய்துள்ளனர் நேற்று நூறாவது நாளை எண்ணி அங்கு உள்ள மக்கள் அனைவரும் கூடி கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. மேலும் இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.