மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.1000 நிவாரணம் வழங்குவது எப்படி ? அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் #covid19 #tngovt #physicallychallenged
மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.1000 நிவாரணம் வழங்குவது எப்படி ? அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் #covid19 #tngovt #physicallychallenged

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் வருமாறு:
கொரோனா ஊரடங்கால் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிவாரணத்தை அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர்கள் செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்தும் குழு நியமிக்கப்பட்டு அதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை இடம்பெறச் செய்ய வேண்டும்
இதற்கான விநியோக படிவத்தில் தேவையான விபரங்களை மாற்றுத்திறனாளி அளிக்க வேண்டும். வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பற்றிய விபரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு சம்பந்தப்பட்ட அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் எப்படி வழங்க வேண்டும் என்பது பின்னர் அறி விற்கப்படும்.
நிவாரணம் மறுக்கப்பட்டால் மாநில அளவிலான உதவி நம்பரை 1800425011 தொடர்பு கொள்ளலாம். அரசு மறு வாழ்வு இல்லங்கள், பிற இல்லங்களில் தங்கியுள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு நிவாரணத் தொகை சென்றடைய வேண்டும்.
இதுவரை உதித் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், அவர்களின் புகைப்படம், தேசிய அடை யாள அட்டை , மருத்துவச் சான்றிதழ் நகல், புகைப்படத்து டன் கூடிய அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளில் ஒன்றின் நகல், வசிப்பிடத்துக்கான அடையாள அட்டைகளில் ஒன்றின் நகலை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் வழங்க வேண்டும். ஆனால்,நிவாரணத் தொகையைப் பெற இது கட்டாயமில்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.