Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் சிறப்பு தூய்மை இயக்கத்தால் ரூபாய் 1000 கோடி வருவாய்!

மத்திய அரசின் சிறப்பு தூய்மை இயக்கத்தின் கீழ் குப்பைகளை தூய்மை செய்து கொட்டுவதால் அரசுக்கு ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் சிறப்பு தூய்மை இயக்கத்தால் ரூபாய் 1000 கோடி வருவாய்!

KarthigaBy : Karthiga

  |  13 Sep 2023 10:30 AM GMT

குப்பைகளை அகற்றுவது மற்றும் அரசு துறைகளில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் கோப்புகளை அழிப்பது உள்ளிட்ட தூய்மை பணிகளை இலக்காகக் கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு தூய்மை பிரச்சார இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் தூய்மை இயக்கத்தின் கீழ் சிறப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தூய்மை பிரச்சாரம் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 31- ம் தேதி வரை நடக்க இருக்கிறது . இந்த நிலையில் சிறப்பு தூய்மை இயக்கத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவதன் மூலம் அரசுக்கு ரூபாய் ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை செயலாளர் ஸ்ரீனிவாஸ் இது குறித்து கூறியதாவது:-


தூய்மை இயக்கத்தின் மூன்றாம் கட்டமான சிறப்பு பிரச்சாரம் 3.0 அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்படும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் தூய்மை இயக்கத்தின் சிறப்பு பிரச்சாரம் 2.0 நடத்தப்பட்டதிலிருந்து இதுவரை 1.37 லட்சம் தளங்களில் இந்த இயக்கம் நடத்தப்பட்டு குப்பைகளை அகற்றியதன் மூலம் ரூபாய் 520 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தூய்மை பிரச்சாரத்தின் போது 50 லட்சம் கோப்புகள் களையெடுக்கப்பட்டு 172 லட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது.


மேலும் 31.35 லட்சம் பொதுமக்கள் குறைகள் தொடர்பான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன . வருகிற அக்டோபர் 31- க்குள் அலுவலக குப்பைகளை அகற்றுவதன் மூலம் ஒட்டுமொத்தமாக ₹ 1000 கோடி வருவாயை எதிர்பார்க்கலாம். ஒரு மாத காலம் நடக்கும் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தின் போது மேலும் 100 இலட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News