ரூ.1012 கோடி செலவில் பிள்ளைப்பாக்கம், மணலூர் இடங்களில் புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை அமைக்க உள்ள மத்திய அரசு!அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

மத்திய அரசு ரூபாய் 1012 கோடி செலவில் பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை அமைக்கவுள்ளதாக மத்திய ரயில்வே தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர் இந்தியாவின் மின்னணு உற்பத்தி தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் காரணமாக இத்துறையில் இந்தியா வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் உலகின் உற்பத்தி மையமாக நாங்கள் இந்தியாவின் நிலையை வலுப்படுத்திவருகிறோம் என்றும் தெரிவித்தார்

மேலும் 2014-ம் ஆண்டு மின்னணு துறை மிகவும் மந்த நிலையில் இருந்த போது அத்துறைக்கு முக்கியத்துவம் அளித்ததன் பயனாக இன்று உலகின் இரண்டாவது ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது தெளிவான சிந்தனை செயல்பாட்டில் கவனம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்பு ஆகியவை இந்த நிலைக்கு நாடு உயர்ந்துள்ளதற்கு காரணமாகும் என்று கூறியுள்ளார்
மின்னணு தொழிலைப் பொறுத்தவரை உற்பத்தியுடன் வடிவமைப்பு பொருளாதாரமும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் நம் நாட்டை மிகவும் வலிமையாக்குவது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது உலகம் நம்மை மென் சக்தியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒரு பெரிய இலக்காகப் பார்க்க வேண்டும் என்பதே நமது பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையாகும் என்றும் தெரிவித்துள்ளார்