Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: கேட்ட மாத்திரத்தில் தேடி வரும் உதவி - அதிரடி செயல்பாடுகளை உள்ளடக்கிய 104 உதவி எண் மையம் உருவானது!

புதுச்சேரி: கேட்ட மாத்திரத்தில் தேடி வரும் உதவி - அதிரடி செயல்பாடுகளை உள்ளடக்கிய 104 உதவி எண் மையம் உருவானது!

புதுச்சேரி: கேட்ட மாத்திரத்தில் தேடி வரும் உதவி - அதிரடி செயல்பாடுகளை உள்ளடக்கிய 104 உதவி எண் மையம் உருவானது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2020 12:38 PM GMT

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட உடனேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக இலவச தொலைபேசி எண்களை அறிவித்தன.

சில மாநில அரசுகள் தரைவழி தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்ணை உதவி எண்களாக அறிவித்தன. தமிழ்நாடு அரசு 044-29510500 என்ற தொலைபேசி எண்ணையும் ஒடிசா அரசு 9439994859 என்ற மொபைல் எண்ணையும் அறிவித்தன.

குஜராத், பீகார், கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 104 என்ற பொது எண்ணையே உதவி எண்ணாக அறிவித்தன.

புதுச்சேரி அரசும் 104 என்ற பொது எண்ணையே கோவிட்-19 இலவச உதவி எண்ணாக அறிவித்தது. மத்திய அரசின் உதவி எண் +91-11-23978046 என்பது ஆகும்.

புதுச்சேரி சுகாதாரத் துறை 23-2-2020 அன்றே இந்த 104 இலவச எண் சேவையைத் தொடங்கி விட்டது. சுகாதார இயக்குனர் அலுவலக வளாக மாடியிலேயே இந்த உதவி எண்ணானது செயல்பட்டு வருகிறது.

இதுவே கோவிட்-19க்கான கட்டுப்பாட்டு அறையாகவும் செயல்படுகின்றது. 104 உதவி எண்ணில் 3 தொடர்பு இணைப்புகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறை 24X7 என்ற முறையில் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. மூன்று ஷிப்டுகளாக இயங்கும் இந்த அறையில் ஒவ்வொரு ஷிப்டுக்கும் ஒரு அலோபதி மருத்துவர், ஒரு ஆயுஷ் மருத்துவர் மற்றும் ஒரு மனநல ஆலோசகர் என மூவர் பணியில் இருக்கின்றனர்.

இந்த உதவி எண்களுக்கு 3 விதமாக அழைப்புகள் வருகின்றன. பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முதல் வகை ஆகும்.

கொரோனா வைரஸ், தொற்றுக்கான வாய்ப்புகள், சிகிச்சை, மருத்துவமனை போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் இந்த உதவி எண்ணில் கேட்கின்றனர். அவர்களுக்குத் தகுந்த பதில்கள் தரப்படுகின்றன. பயம், பீதி, பதட்டம் மற்றும் மனக்கோளாறுகளுடன் இந்த உதவி எண்ணில் அழைப்பவர்களுக்கு மனநல ஆலோசனையும் தொலைபேசி வழியாகவே தரப்படுகிறது.

இரண்டாவது வகை அழைப்புகள் மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மருத்துவக் குழுவினரிடம் இருந்து வரும் அழைப்புகள் ஆகும். புதுச்சேரிக்குள் வெளியில் இருந்து வருபவர்களின் உடல்நிலை மற்றும் கொரோனா தொற்று குறித்த விவரங்களை எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவர்கள் 104 உதவி எண்ணிற்குத் தெரிவிப்பார்கள். உள்ளே வந்தவர்கள் எந்த முகவரிக்குச் செல்வதாக எல்லைப் பகுதியில் தெரிவித்து உள்ளனரோ அந்த முகவரிகளை உள்ளடக்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களுக்கு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்படும். அந்தப் பணியாளர்கள் அந்தந்த முகவரிகளுக்குச் சென்று வெளியில் இருந்து வந்தவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

மூன்றாவது வகை அழைப்புகள் 1031 என்ற எண்ணில் இருந்து திருப்பி அனுப்பப்படும் அழைப்புகள் ஆகும். இந்த 1031 என்ற எண் காவல்துறையால் பராமரிக்கப்படும் எண் ஆகும். இந்த எண்ணில் கொரோனா தொடர்பாக வரும் அழைப்புகள் அனைத்தும் 104க்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இவற்றுக்கும் உரிய பதில்கள் தரப்படுகின்றன.

இந்த 104 உதவி எண் மையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 60 முதல் 70 அழைப்புகள் வருகின்றன. 10-6-2020 வரை மொத்தமாக 5804 அழைப்புகள் வந்துள்ளன. "இந்த உதவி எண் தொலைமருத்துவ வசதி போன்றே செயல்படுகின்றது.

தேவையான தகவல்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் மனஆற்றுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் மூலம் 104 உதவி எண் மையம் சிறப்பாக சேவை ஆற்றி வருகின்றது. சுமார் 6,000 அழைப்புகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்லி இருப்பதே ஒரு சாதனைதான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News