Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் ரூபாய் 1.4 லட்சம் கோடியில் 108 சாகர்மாலா திட்டங்கள் - அசத்தும் மோடி அரசு!

தமிழ்நாட்டில் ரூபாய் 1.4 லட்சம் கோடி மதிப்பில் 108 சாகர்மாலா திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ரூபாய் 1.4 லட்சம் கோடியில் 108 சாகர்மாலா திட்டங்கள் - அசத்தும் மோடி அரசு!

KarthigaBy : Karthiga

  |  25 April 2023 5:00 PM GMT

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் சென்னை ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி வளாகத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான துறைமுகங்கள், நீர் வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் ரூபாய் 77 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்ப மையத்தை மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து மந்திரி சார்பானந்த சோனோவால் நேற்று திறந்து வைத்தார்.


இதன் மூலம் துறைமுகங்கள் ,நீர் வழிகள், கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய வசதிகள் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் நியூ மங்களூரு துறைமுக ஆணையத்தின் தலைவர் வெங்கடரமணா , அக்கராஜு , சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் வி.காமகோடி இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழக துணை வேந்தர் மாலினி சங்கர் , சென்னை ஐ.ஐ.டி டீன்.கே. முரளி, கடல் என்ஜினியரிங் துறை தலைவர் எஸ் நல்லையரசு, பேராசிரியர் சன்னாசி ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


துறைமுகங்கள், நீர் வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்த பிறகு மத்திய மந்திரி சர்வானந்த சோனாவால் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் நேர்மையான திறமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்கள் ஆகியவற்றால் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக மாறி இருக்கிறது .மேலும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களைக் கொண்ட முதல் மாநிலமாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராகவும் தமிழ்நாடு உள்ளது . பிரதமரின் சாகர்மாலாவின் மாற்றத்துக்கான முதன்மை திட்டம் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.


சாகர்மாலா திட்டத்தில் தமிழ்நாட்டில் 1.4 லட்சம் கோடி மதிப்பில் 108 திட்டங்கள் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரூபாய் 34 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான 43 திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டன. 34 திட்டங்கள் ரூபாய் 67 ஆயிரத்து 759 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூபாய் 44 ஆயிரம் கோடி மதிப்பில் 31 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து சாகர்மாலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்றார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News