Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு நேரடி மானியம் மூலம் 10,800 கோடி ரூபாய் மிச்சம்!! மோடி அரசு நிகழ்த்தியுள்ள மிகப்பெரும் சாதனை!!

விவசாயிகளுக்கு நேரடி மானியம் மூலம் 10,800 கோடி ரூபாய் மிச்சம்!! மோடி அரசு நிகழ்த்தியுள்ள மிகப்பெரும் சாதனை!!

விவசாயிகளுக்கு நேரடி மானியம் மூலம் 10,800 கோடி ரூபாய் மிச்சம்!! மோடி அரசு நிகழ்த்தியுள்ள மிகப்பெரும் சாதனை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 10:22 AM GMT


கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) அன்று வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் விவசாயிகளுக்கான உரமானியம் நேரடி பயன் மாற்ற (டிபிடி) செயல்பாட்டு திட்டம் மூலம் திட்டத்தின் முதல் ஆண்டில், மத்திய அரசு 10,800 கோடி ரூபாய் (4 1.54 பில்லியன்) சேமித்துள்ளதாகவும், இது மத்திய அரசின் நிர்வாகத்திறனின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுவதாக தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.


டிபிடி மூலம் உர மானியப் பரிமாற்றம் 2017 அக்டோபரில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் கீழ், ஆதார் அடையாள அட்டை மூலம் பரிவர்த்தனைகளை பதிவு செய்து சில்லறை விற்பனையாளர் மூலம் விவசாயிகளுக்கு உரத்தை விற்றதன் மூலம் அரசு அதற்கான மானிய தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே அனுப்பி வருகிறது.


மைக்ரோசேவ் கன்சல்டிங் (எம்.எஸ்.சி) மதிப்பீட்டின்படி அரசாங்கத்தின் இந்த முன் முயற்சி, உரங்களின் இயக்கம், தேவை மற்றும் விநியோகம் ஆகியவற்றை இம்முறை கண்காணிக்க உதவியது. இந்த முயற்சி, காகிதப்பணியைக் குறைப்பதன் மூலம் எளிதான கடித வேலைகளையும் செயல்படுத்தியுள்ளது.





உரங்களை உற்பத்தி செய்து அனுப்பிய பின்னர் எந்தவொரு நுகர்வு மற்றும் விநியோகத்தின் பதிவும் இல்லாமல் யூனியன் அரசு மானியத்தை செலுத்தும் முந்தைய மானிய விநியோக முறையை விட இது ஒரு பெரிய முன்னேற்றமாக காணப்படுகிறது.


மத்திய அரசு ஆண்டுக்கு 70,000 கோடி ரூபாய் உர மானியத்தை விவசாயிகளுக்கு செலுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது அந்த மானியம் ஆதார் அடையாளப் பதிவுகள் மூலம் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுதன் மூலம் 10,800 கோடி ரூபாய் இடைத்தரகர்களின் கைக்கு செல்லாமல் அரசு மிச்சப்படுத்தியுள்ளது மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


This is a Translated Article From SWARAJYA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News