பிரதமர் மோடியின் ஒற்றை சொல்லை பின்பற்றிய ஒட்டுமொத்த சிவாஜி கணேசன் குடும்பம் - நெகிழவைக்கும் வீடியோ!
பிரதமர் மோடியின் ஒற்றை சொல்லை பின்பற்றிய ஒட்டுமொத்த சிவாஜி கணேசன் குடும்பம் - நெகிழவைக்கும் வீடியோ!

கொரோனா ஒழிப்பிற்காக நாடு முழுவதும் தன்னலம் இன்றி சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு இந்தியர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு வெளியில் வந்து கை தட்டி நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு இந்தியா முழுவதும் கரகோஷங்களால் அதிர்ந்தது. சென்னையில் பெரும்பாலும் அனைத்து வீடுகளுக்கும் வெளியில் வந்து மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
இந்நிலையில் தி.நகரில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசன் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் கரகோஷங்களை எழுப்பி தங்கள் நன்றியை தெரிவித்து நெகிழ வைத்துள்ளது.
The first celebrity clapping to come, Nadigar Thilagam's Annai illam.
— Sivaji VC Ganesan - God's Own Son. (@SivajiVCGanesan) March 22, 2020
நாட்டிற்கும் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் தன்னலமில்லாமல் நல்ல காரியங்கள் பலவற்றை விளம்பரம் இல்லாமல் ஆத்மாத்ருப்திக்காக செய்த நடிகர் திலகம். அவர் வழியில் அவர் குடும்பம் இன்று தங்கள் பங்களிப்பை பகிர்கிறது. pic.twitter.com/IveBIE07Cg