Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் முப்படைகளிலும் தங்களின் ஆளுமைத் திறமையை நிரூபித்த 11 ஆயிரம் பெண்கள்

முப்படைகளில் 11,414 பெண்கள் பணியாற்றி வருவதாக மக்களவையில் ராணுவ இணை மந்திரி தெரிவித்தார்.

இந்தியாவின் முப்படைகளிலும் தங்களின் ஆளுமைத் திறமையை நிரூபித்த 11 ஆயிரம் பெண்கள்

KarthigaBy : Karthiga

  |  5 Aug 2023 12:00 PM GMT

மக்களவை கேள்வி நேரத்தில் இராணுவ இணை மந்திரி அஜய் பட் ஒரு கேள்விக்கு அடித்த பதில் வருமாறு:-


கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி முப்படைகளில் 11,414 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் அதிகாரிகள், மருத்துவம், பல் மருத்துவம் நர்சிங், ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் பெண்களும் அடங்குவர். அதிகபட்சமாக ராணுவத்தில் 7054 பெண்கள் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மண்டவியா கூறியதாவது:-

கடந்த 2022 ஆம் ஆண்டு வரை மாற்று சிறுநீரகம் கோரி, சுமார் 40,000 நோயாளிகள் பதிவு செய்திருந்தனர். அவர்களின் 11,705 பேருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. 13,430 நோயாளிகள் கல்லீரலுக்காக பதிவு செய்ததில் என் 3,920 பேருக்கு மாற்று கல்லீரல் பொருத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News