114 அதிநவீன போர் விமானங்களை திட்டமிட்டுள்ள இந்தியா:வலுசேர்க்கும் அமெரிக்காவின் எஃப் 35 போர் விமானம்!

By : Sushmitha
நடப்பாண்டில் 114 அதிநவீன போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
அதாவது இந்திய விமான படையை நவீனமாக்கும் வகையில் அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து விமானப்படையில் உபகரணங்களை மேம்படுத்து முயற்சியை மத்திய அரசு தொடங்கியது அதில் தற்பொழுது இந்த ஆண்டில் 114 போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது
இந்தத் திட்டம் நாட்டின் போர் விமானங்களின் இருப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு படை அமைச்சகம் தெரிவித்துள்ளது மேலும் சீனா தனது விமானப்படையை வேகமாக விரிவுபடுத்தி வருகிற நிலையில் இந்தியாவின் இந்த முடிவு ஒரு நல்ல முடிவாகவும் மிகவும் முக்கியமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள இந்தியாவிற்கு ரஷ்யா பல நேரங்களில் பல சகாப்தங்களில் முக்கிய ஆயுதங்களை வழங்கி வருகிறது அதன்படி தற்போது இந்தியாவிற்கு சொந்தமான சுகோய் சு-30எம்.கே. ஐ எச்.ஏ.எல் தேஜாஸ் முக்கிய விமானங்களில் ஒன்றாக உள்ளது
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு எப் 35 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
