ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம் - பிரதமர் மோடி!
ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம் - பிரதமர் மோடி!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு ஒன்றுபட்டுள்ளது
வீட்டில் இருந்தாலும் நாம் ஒவ்வொருவருடனும் 130 கோடி இந்தியர்கள் உள்ளனர். இந்தியா கடைப்பிடித்த மக்கள் ஊரடங்கு உலகிற்கே முன்னுதாரணமாக இருந்தது. இந்தியாவின் வழியை உலகில் பல நாடுகள் பின்பற்றுகின்றன
வரும் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் மின்விளக்குகளை அணைக்க வேண்டும். 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு பால்கனியில் நின்று செல்போன் விளக்குகளை ஒளிர விடுங்கள்
வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம். வரும் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு அகல் விளக்கு, டார்ச் விளக்கு ஆகியவற்றை 9 நிமிடங்களுக்கு ஒளிர விடுங்கள்
வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கை 9 நிமிடங்களுக்கு ஒளிரவிட வேண்டும். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில், விளக்குகளை ஏற்ற வேண்டும்.
மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், ஒன்றுகூடி விளக்கு ஏற்றக் கூடாது. 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றி, நாட்டு மக்கள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். கொரோனா உருவாக்கிய இருளில் இருந்து மக்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.