Begin typing your search above and press return to search.
காரைக்காலில் தீப்பற்றி எரிந்த ரோந்து வாகனம் - உயிர் தப்பிய காவலர்கள்!
காரைக்காலில் தீப்பற்றி எரிந்த ரோந்து வாகனம் - உயிர் தப்பிய காவலர்கள்!

By :
உலகையே அச்சுறுத்தும் கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் அடுத்த உள்ள நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளக்கொடி கிராமத்தில் ரோந்து பணியில் உதவி ஆய்வாளர் சுரேஷ், ஓட்டுனர் நந்தகோபால் ஆகியோர் ஈடுபட்டனர். இருவரும் ரோந்து சென்று கொண்டிருந்த போது வாகனம் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது.
இதை அறிந்த இரு காவலர்களும் வாகனத்தை விட்டு உடனடியாக கீழே இறங்கி சென்றனர். மேலும், ஏரிந்துக் கொண்டிருந்த வாகனத்தை அணைக்க அருகில் இருந்த ஆற்றங்கரையிலிருந்து தண்ணீரை அள்ளி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முழுவதுமாக வாகனம் தீயில் எறிந்து கருகியது. இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக இரண்டு காவலர்களும் காயமின்றி உயிர் தப்பினர்.
Next Story