தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு பாத பூஜை செய்த பா.ஜ.க நிர்வாகிகள் - பொது மக்கள் நெகிழ்ச்சி!
தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு பாத பூஜை செய்த பா.ஜ.க நிர்வாகிகள் - பொது மக்கள் நெகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகயாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரவு பகலாக மக்களை காக்க உழைத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள், தூய்மை காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து ஊக்குவிக்கும் விதமாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய மிட்டப்பள்ளியில் தூய்மை காவலர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் நமச்சிவாயம் தலைமையில் பாத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
மிட்டப்பள்ளி தூய்மை காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம் பாத பூஜை செய்து பா.ஜ.க நிர்வாகிகள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு இலவச உணவு, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட பொது செயலாளர் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய தலைவர் சிவா உட்பட ஏராளமான பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூய்மை காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மிட்டப்பள்ளி ஊராட்சியை சுத்தமாக வைத்திருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் அவர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். கடந்த ஒரு வார காலமாக மிட்டப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கி வந்த மிட்டப்பள்ளி பாஜக நிர்வாகிகள் தூய்மை காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாத பூஜை செய்த நிகழ்வு பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது.