Kathir News
Begin typing your search above and press return to search.

12ஆம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பாதிரியார் போக்சோவில் கைது!

12ஆம் வகுப்பு மாணவியிடம்    தகாத முறையில் நடக்க முயன்ற பாதிரியார் போக்சோவில் கைது!
X

DhivakarBy : Dhivakar

  |  8 July 2022 7:29 AM IST

கோவை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற 'ஸ்டீபன்ராஜ்' என்ற பாதிரியார், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


கோவை மலுமச்சம்பட்டியிலிருந்து, பொம்மை வியாபாரம் செய்யும் தம்பதியினருக்கு, இரு மகள்கள் உண்டு. ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் இருவரும் பொம்மை வியாபாரத்திற்காக வெளியூர் செல்ல, மாணவிகள் அவர்களின் பாட்டி வீட்டில் வசித்தனர்.


அப்பொழுது அவர்களது பாட்டி வெளியில் சென்ற சமயம் பார்த்து, 53 வயதுடைய ஸ்டீபன்ராஜ் என்ற பாதிரியார், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். அதிர்ந்துபோன அம்மாணவி சத்தத்துடன் அலறியுள்ளார். உடனே சம்பவ இடத்திலிருந்து பாதிரியார் தப்பித்துவிட்டார்.


பின்னர் மாணவியின் பாட்டி அப்பகுதி மக்கள் உதவியுடன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News