கேரளாவில் நடந்தது போல் திருச்சியில், மாமிசத்தில் வெடிகுண்டு வைத்து குள்ளநரியைக் கொன்று பையில் எடுத்துச் சென்ற கொடூரம் - 12 பேர் கைது.! #Trichy
கேரளாவில் நடந்தது போல் திருச்சியில், மாமிசத்தில் வெடிகுண்டு வைத்து குள்ளநரியைக் கொன்று பையில் எடுத்துச் சென்ற கொடூரம் - 12 பேர் கைது.! #Trichy

By : Kathir Webdesk
திருச்சியில் ஜெயபுரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி ஒரு குள்ளநரி கொல்லப்பட்டதாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 12 நரிக்குரவர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மாமிசத்துண்டுக்குள் வெடிகுண்டு வைத்து நரியை ஈர்த்ததாகவும், சாப்பிட்டவுடன் வெடித்து, தாடை கிழிந்து நரி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கிராமத்திற்கு தேன் எடுக்க சென்றதாக வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிறகு குள்ளநரி ஒன்றைக் கண்டதும், அவர்கள் நாட்டுவெடி குண்டுகளைப் பயன்படுத்தி நரியின் பற்கள் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடினர். குற்றம் சாட்டப்பட்டவர் மெக்குடி கிராமத்திற்கு அருகே தேநீர் அருந்துவதையும், கையில் ஒரு பையை எடுத்துச் செல்வதையும் கண்ட ஜெயபுரம் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகித்து பையைத் திறந்து பார்த்த போது நரியின் இறந்த உடலைக் கண்டுபிடித்தார். 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குள்ளநரி ஒரு அட்டவணை I விலங்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
போலிஸ் கான்ஸ்டபிள் பின்னர் திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டு வெடிகுண்டுகளை எவ்வாறு பெற்றார் என்பதையும் வனத்துறை விசாரித்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு (ஜெயபுரம்) சி கோகிலா அவர்கள் எப்படி 12 பேரை கைது செய்தார்கள் என விவரித்தார். பன்னிரண்டு பேரும் திருவரம்பூருக்கு அருகிலுள்ள புலாங்குடி காலனியைச் சேர்ந்த குற்றவாளிகள் ராஜு, ராம்ராஜ், சரவணன், யேசுதாஸ், சரத்குமார், தேவதாஸ், பாண்டியன், விஜயகுமார், சத்தியமூர்த்தி, சரத்குமார், ராஜமணிக்கம், ராஜு, மற்றும் பட்டம்பிளை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேரளாவில் யானை, இமாச்சல பிரதேசத்தில் பசு இப்போது தமிழ்நாட்டில் குள்ளநரி என வெடி வைத்து விலங்குகளைக் கொல்வது பலருக்கும் கவலையை அதிகரித்துள்ளது.
Cover image courtesy: Times Of India
