Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு வருகிறேன், அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அரசு உத்தரவை கடைபிடியுங்கள் - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தன் தாய்க்கு எழுதிய கண்ணீர் கடிதம்.!

ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு வருகிறேன், அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அரசு உத்தரவை கடைபிடியுங்கள் - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தன் தாய்க்கு எழுதிய கண்ணீர் கடிதம்.!

ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு வருகிறேன், அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அரசு உத்தரவை கடைபிடியுங்கள் - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தன் தாய்க்கு எழுதிய கண்ணீர் கடிதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 9:48 AM GMT

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் இன்று காலை 10.44 மணிக்கு எய்ம்ஸில் காலமானார். அவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகப்பணிகள் தொடர்பாக ஒரு கூட்டத்தில் இருந்தபோது, அவரது தந்தை இறந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அனாலும் முதல்வர் யோகி தனது கூட்டத்தைத் தொடர்ந்தார், மாநிலத்தில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த அந்த அவசரக் கூட்டத்தை முடித்த பின்னரே எழுந்தார்.

பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது தந்தை காலமானதை அடுத்து தனது மனதில் எழுந்த வேதனையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை தனது குடும்பத்தினருக்கு எழுதியுள்ளார், அதில் அவர் இக்கட்டான இந்த சமயத்தில் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக தனது தந்தை, தாயிடம் மன்னிப்பு கோருவதாக எழுதியுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தந்தையின் மரணத்தால் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்து அந்த கடிதத்தை எழுதியுள்ளார். தனது தந்தை தனக்கு கடின உழைப்பை கற்றுக் கொடுத்ததாகவும், அந்த சிறந்த பண்பே பிறருக்காக உண்மையாக உழைக்கும் தன்னலமற்ற குணத்தை தனக்கு தந்தது என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

தனது தந்தை வாழ்ந்த கடைசி தருணங்களில் ஒரு முறையாவது தனது தந்தையைப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அக்கடிதத்தில் எழுதுகிறார், இருப்பினும், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் மற்றும் தனது மாநிலத்தின் 23 கோடி மக்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொறுப்பு காரணமாக, இறந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறுகிறார்.

அந்த கடிதத்தின் கடைசி குறிப்பில் யோகி ஆதித்யநாத் தனது தாயிடமும் அவரது உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களிடமும் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவுகளை மதிக்க வேண்டும் என்றும், தந்தையின் இறுதி சடங்குகளில் சிலர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

தனது தந்தையின் படத்தை வைத்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியதாக கடிதத்தில் கூறியுள்ள யோகி ஆதித்யநாத், ஊரடங்கு காலம் முடிவடைந்ததும் துக்கமடைந்த தனது தாய் மற்றும் குடும்பத்தினரை சந்திப்பேன் என்றும் கூறி அந்த கடிதத்தை முடித்துள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறு வயதிலேயே குடும்பத்தை பிரிந்து சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டார், எனவே அவரது குடும்பத்தை 'பூர்வாஷ்ரம்' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள். யோகியின் தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். என்றாலும் ஓய்வு பெற்ற பிறகும் விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்பில் குடும்பத்துடன் ஈடு பட்டார். 1977 இல் பிறந்த யோகி ஆதித்யநாத்தின் உண்மை பெயர் அஜய் சிங் பிஷ்தாக். 1994 ல் நாத் பிரிவில் சேர்ந்து துறவறம் மேற்கொண்டு இளம் வயதிலேயே குடும்ப வாழ்க்கையையும் சமூக உறவுகளையும் கைவிட்டார்.

மரணம் அடைந்த யோகி ஆதித்யநாத்தின் தந்தை பெயர் ஆனந்த் சிங் பிஷ்ட், அவரது தாயார் பெயர் சாவித்ரி தேவி ஆகும். இவர்களின் ஐந்தாவது குழந்தை குழந்தைதான் யோகி ஆதித்யநாத். .

யோகி ஆதித்யநாத் 26 வயதிலிலேயே எம்.பி.யாக ஆனார். பின்னர் 2017 ல் உத்தரபிரதேச முதல்வராக ஆன போதிலும், அவரது பெற்றோரும் உடன்பிறப்புகளும் வயலும், வாழ்வும் போல சில ஆடுமாடுகளை வைத்துக் கொண்டு ஒரு சாதாரண வீட்டில் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News