1.25 லட்சம் கோடியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்!
கூட்டுறவுதுறையில் 1.25 லட்சம் கோடியில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
By : Karthiga
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை சேமித்து வைக்கும் வசதிகள் இல்லாதது அவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. எனவே கூட்டுறவுத் துறையில் 1.25 லட்சம் கோடியில் உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார. எனவே கூட்டுறவுத்துறையில் ரூபாய் 1.25 லட்சம் கோடியில் உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார் .
உணவுப் பொருள்களை சேமிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடோன்கள் மற்றும் கிடங்குகள் கட்டப்படும். இதில் 11 மாநிலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கட்டப்பட்ட 11 குடோன்களையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அத்துடன் மேலும் 500 கூட்டுறவு சங்கங்களில் குடோன்கள் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-
இதன்படி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் குடோன்கள் கட்டப்படும். உணவு தானியங்களை சேமிக்கும்போது நாட்டின் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்கள் .இந்த பிரச்சனையில் முந்தைய அரசுகள் உரிய கவனம் செலுத்தவில்லை. மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும். இதற்காக 1.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கிடங்குகள் மற்றும் குடோன்களில் சேமித்து அதற்காக நிறுவன கடனை பெறலாம். அத்துடன் சந்தை விலைகள் லாபகரமாக இருக்கும் போது தங்கள் பொருட்களை விற்கலாம்.
சமையல் எண்ணெய்கள் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் உரங்களின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு அமைப்புகளின் தேர்தல் முறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதன் மூலம் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய முடியும். கூட்டுறவுத்் துறை வளர்ச்சிக்காக வளர்ச்சிக்காக கடந்த பத்து வருடங்களில் மத்திய அரசு ஏராளமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.இதில் நிச்சயமாக இந்த துறைக்காக தனி அமைச்சகமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சகத்தின் மூலம் கூட்டுறவு துறையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் விவசாய உற்பத்தி அமைப்புகளை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் 8000 அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன .இந்த வெற்றி தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உருவாக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது .இதில் பெரும்பாலானவை மீன்வளம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கானது ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI