தமிழ்நாட்டில் உள்ள 12,524 ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து : மத்திய அரசு.!
தமிழ்நாட்டில் உள்ள 12,524 ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து : மத்திய அரசு.!

"பாரத் நெட்" திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் உன்னதமான உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும்.
இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அன்று வலைத்தளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.
ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்து ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் வேளையில், எதிர்பாராதவிதமாக கொரோனா நோய் தடுப்பிற்கான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக கொண்டு வரப்பட்ட "பாரத் நெட்" என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், கருவிகளுக்கான டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறு டெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.