1.26 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் நிறுவனங்கள்-மத்திய மந்திரி சபை ஒப்புதல்!
ரூபாய் 1.26 லட்சம் கோடியில் செமி கட்ட நிறுவனங்கள் உருவாக்குவதற்காக மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற முன்னேற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான சில திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.
மேற்கூறையில் சோலார் தகடுகள் பதிக்கும் திட்டத்திற்கு மத்திய சபை தனது ஒப்புதலை வழங்கியது.ரூபாய் 75 ஆயிரத்து 21 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூறையில் இந்த சோலார் தகடுகள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'பிரதமர் - சூர்யா கர்' இலவச மின்சார திட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்த திட்டம் கடந்த மாத 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சோலார் தகடு பொருத்தப்படும் வீடுகள் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை பெறுவதுடன் உபரி மின்சாரத்தை வெளியில் விற்பனை செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ள மத்திய அரசு இதன் மூலம் 17 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறியுள்ளது .இதே போல குஜராத்தின் சனாந்த், தொலேரா மற்றும் அசாமின் மெரிகான் ஆகிய இடங்களில் ரூபாய் 1.26 லட்சம் கோடியில் மூன்று செமி கண்டத்தை உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது .இந்த நிறுவனங்களின் கட்டுமான பணிகள் அடுத்த 100 நாட்களுக்குள் தொடங்கும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் தயார் நிலைக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒரே சுகாதார திட்டத்துக்காக திட்ட இயக்குனர் பதவி உருவாக்கத்திற்கும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
SOURCE :DAILY THANTHI