Kathir News
Begin typing your search above and press return to search.

திரையரங்குகள் அழிந்து விடாது - கமல்.!

திரையரங்குகள் அழிந்து விடாது - கமல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 April 2020 8:00 AM IST

'அறிவும் அன்பும்' எனும் பெயரில் பாடல் எழுதி யுவன், அனிருத், சித்தார்த் உள்ளிட்டவர்களுடன் பாடி வெளியிட்டுள்ள கமல், அதனைத் தொடர்ந்து காணொளி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்.

ஊரடங்கில் திரையுலகில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பேசியவர் "சினிமா அத்தியாவசியத் தேவை இல்லை. எனவே அதுவும் பல வியாபாரங்களைப் போலப் பாதிக்கப்படும். ஆனால் திரையரங்குகள் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடாது. நமக்குக் கூட்டம் கூடுவது பிடிக்கும். ஆனால் மாயாஜாலம் போல ஊரடங்கு முடிந்தவுடன் ஆரம்பித்துவிடக்கூடாது. மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும் முன் அரசும், மருத்துவர்களும் நமக்குச் சரியான அறிவுரை வழங்க வேண்டும்" என்றார்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி குறித்துப் பேசியவர் "சாட்டிலைட் சேனல்கள் வந்த நேரத்தில் அதை எதிர்த்த பெரும்பாலான இயக்குநர்கள் ஒரு கட்டத்தில் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு மாறினார்கள். 2013-ம் ஆண்டு 'விஸ்வரூபம்' படத்தை நேரடியாக வீடுகளுக்கு எடுத்துச் செல்ல நினைத்த போது அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் தொழில்நுட்பத்துக்கு நன்றி, திரைப்படம் எடுப்பது எதிர்காலத்தில் ஜனநாயகமயமாகும், இன்னும் தனிப்பட்ட கலையாக, பிரம்மாண்டமாக அது மாறும்" என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News