கொரோனா தடுப்பு பணியை அற்பணிப்புடன் செய்யவேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன்பகவத் வேண்டுகோள்.!
கொரோனா தடுப்பு பணியை அற்பணிப்புடன் செய்யவேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன்பகவத் வேண்டுகோள்.!

ராஷ்ட்ரிய சுயம் சேவா சங்கத்தின் தலைமை அலுவலகம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே தேசிய தலைவர் மோகன் பகவத் காணொளி காட்சி மூலம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் கலந்துரையாடல் செய்தார்
சேவை தொண்டர்களிடம் பேசிய தேசிய தலைவர் மோகன் பகவத் நாட்டில் உள்ள 130 கோடி இந்திய மக்களும் நம்முடையவர்கள் தான் என்பதை மனதில் நிலை நிறுத்தி பணி செய்ய வேண்டும்
நாம் பொறுமையாகவும்,அமைதியாகவும் இருக்கவேண்டும்
இந்தியாவிற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள் நமது மேன்மையான நற்பண்புகளை நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்பதால் அச்சமோ கோபமோ கூடாது
நாட்டில் ஒரு சிலர் தவறு செய்தாலும் கூட எல்லோரிடமும் குற்றம் காணவேண்டாம் அதையே சிலர் தவறாக பயன்படுத்துவார்கள்
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான கொரோனா தொற்று மற்றும் தப்லிக் மாநாடு தொடர்பானவர்களின் செயல்பாடுகளை மறைமுகமாக கூறினார்
நமது சேவை தொண்டர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் இந்த அசாதாரன தருணத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி சேவை செய்ய வேண்டும்
கொரோனா அவசர காலத்தில் எவருக்கெல்லாம் உதவி தேவைபடுகிறதோ அவர்களுக்கு நீங்கள் உங்கள் சொந்த முயற்ச்சியில் உதவ வேண்டும்
இது போன்ற நெருக்கடியான நேரத்தில் அற்பணிப்புடன் உதவ வேண்டியது நமது கடமையாகும் என சேவை தொண்டர்கள் மத்தியில் பேசினார் மோகன் பகவத்