நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்ததால் கிளம்பிய சர்ச்சை - மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!
நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்ததால் கிளம்பிய சர்ச்சை - மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!

மலையாளத்தில் திரைக்கு வந்த "வரனே ஆவிஷ்யமுண்டு" இப்படத்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு தற்போது பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. அந்தப் படத்தின் கதாநாயகனும் மற்றும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்ற ஏப்ரல் மாதம் மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த "வரனே ஆவிஷ்யமுண்டு" என்ற படம் வெளியானது. இப்படம் முழுவதும் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயை பிரபாகரன் என பெயர் வைத்து அழைப்பார்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவரின் பெயர் பிரபாகரன். இது உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களுக்கு தெரியும். இவருடைய பெயரை நாய்க்கு வைத்தது இல்லாமல் தமிழர்களை இழிவு படுத்தி விட்டனர் என படத்தின் கதாநாயகன் துல்கர் சல்மானையும், படத்தின் இயக்குனர் அனூப் சத்யனையும் தமிழ் ரசிகர்கள் அவர்கள் மீது குற்றம் சாடி வருகின்றனர். மேலும் இதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் இந்த விஷயம் இப்போது தான் இந்த அளவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் சமீபத்தில் தான் இப்படம் ஒடிடி மூலம் வெளியானது. இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்தது தெரிய வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக துல்கர் சல்மான் தன்னுடைய மன்னிப்பையும் ஆதங்கத்தையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! pic.twitter.com/erbjftlNbj
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020
Source: Dinamalar