பாழடைந்த நிலையில் உள்ள சோழ கோவில்: நடவடிக்கை எடுக்கப்படுமா?
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
By : Bharathi Latha
தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகே துக்கச்சியில் உள்ள ஆபத்சஹாயேஸ்வரர் கோயில் ஒரு முக்கியமான வரலாற்றுச் சின்னமாகும். ஆனால் தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. கோவிலை சுற்றிலும் நிறைய கட்டிடங்கள் தகர்ந்து மேலும் கட்டிடங்களுக்கு இடையே தேவையற்ற செடிகள் வளர்ந்து கிடக்கிறது. கும்பகோணம் அருகே துக்கச்சியில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாழடைந்து இருக்கிறது. மேலும் இந்த கோவிலில் பாதுகாக்கும் பொருட்டு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க IIT மெட்ராஸ் முடிவு செய்தது.
இக்கோயிலை ஆய்வு செய்த சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பாதுகாப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தற்பொழுது அதை சமர்ப்பித்துள்ளது. "நாங்கள் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வருகிறோம். டிசம்பர் இறுதிக்குள் அதை இந்து சமய அறநிலையத் துறையிடம் சமர்ப்பிக்க முடியும். இப்போது அதை சமர்ப்பித்தால், துறை அதை பற்றி ஆலோசித்து, புதிய நிதியாண்டில், அது தளத்தில் வேலையைத் தொடங்கலாம் என்பது நோக்கம்"என்று IIT-யின் சிவில் இன்ஜினியரிங் துறையின் கட்டமைப்பு பொறியியல் குழுமத்தின் இணை பேராசிரியர் அருண் மேனன் அவர்கள் ஏற்கனவே கூறியிருந்தது தற்பொழுது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும் இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலை பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்கள். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இந்த கோவில் தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy:The Hindu