13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மத போதகர் கைது!

By : Bharathi Latha
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதபோக கரையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மனைவி, மகனையும் போலீஸார் கைது செய்தனர். தக்கலை அருகே செம்பருத்தி விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ரோஸ் (63). கிறிஸ்தவ மத போதகரான இவர், தக்கலை பெருஞ்சிலம்பு பகுதியில் ஜெபக் கூடம் நடத்திவருகிறார். அங்கு நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டங்களில் தொழிலாளியின் மனைவி தனது 13 வயது மகளு டன் பங்கேற்று வந்தார்.
இதனிடையே, சிறுமிக்கு திடீ ரென வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, பரிசோதனை யில் தெரியவந்தது. பெற்றோர் கேட்டபோது, போதகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து போதகரிடம் கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்ததுடன், சிறுமியையும் பெற்றோரையும் கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சிறு மியைச் சேர்த்தார். அங்கு பரிசோதனை நடத்திய பின்னர், மருத்துவமனை நிர்வா கம் சார்பில், அங்குள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
