ரூ.1,332 கோடி மதிப்பில் திருப்பதி-காட்பாடி இடையே இருவழி ரயில் பாதைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு திருப்பதி - பகாலா - காட்பாடி இடையேயான 104 கிலோமீட்டர் ஒரு வழி ரயில் பாதையை இரு வழி ரயில் பாதையாக மாற்றும் ரூபாய் 1,332 கோடி செலவிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
அதாவது இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பணி மேம்படுத்தப்பட்ட ரயில் பாதை திறன் இயக்கத்தை மேம்படுத்தி பல்தடத் திட்டமானது செயல்பாடுகளை எளிதாக்கி கூட்ட நெரிசலை குறைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இந்த திட்டம் அமைந்துள்ளது
மேலும் இந்த திட்டம் இப்பகுதியில் உள்ள மக்களை விரிவான வளர்ச்சியின் மூலம் தற்சார்பானவர்களாக மாற்றும் அதோடு அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் ஆந்திர பிரதேசம் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை இணைக்கும் இந்த திட்டம் தற்போது உள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 113கி.மீ அளவுக்கு அதிகரிக்கும் அதுமட்டுமின்றி இந்த திட்டம் சுமார் 400 கிராமங்களுக்கும் 14 லட்சம் மக்களுக்கும் போக்குவரத்தை மேம்படுத்தும்
மேலும் நாட்டின் சரக்கு போக்குவரத்து செலவை குறைப்பதற்கும் எண்ணெய் இறக்குமதி குறைவதற்கும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கும் இது ஒரு கோடி மரங்களை நடுவதற்கு சமமாக இருக்கும் என மத்திய அரசின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது