"பாகிஸ்தானில் நாட்டில் பிறப்பதே சாபம்" - கண்ணீர் விடும் 14 வயது இந்து சிறுமியின் தாய்.!
"பாகிஸ்தானில் நாட்டில் பிறப்பதே சாபம்" - கண்ணீர் விடும் 14 வயது இந்து சிறுமியின் தாய்.!

பாகிஸ்தானில் இந்துக்களின் வீடுகள் பாகிஸ்தானிய அதிகாரிகளால் வேண்டுமென்றே இடிக்கப்பட்டு அவர்கள் நடுத்தெருவில் உணவு, உறைவிடம் இன்றி தவிக்க விடப்பட்ட செய்தி சமீபத்தில் வெளியானது. மேலும், இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மையின சிறுமிகளும் பெண்களும் கடத்தப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வரும் செய்திகளும் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு 14 வயது இந்து சிறுமி பாகிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ரகத் ஆஸ்டின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிந்து மாகாணத்தின் ஹாலா மிட்டியரி என்ற பகுதியில் உள்ள சயீதாபாத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் கடத்தப்பட்ட சிறுமியின் தாயார் "இஸ்லாமிய நாட்டில் பிறப்பதே ஒரு சாபம்" என்று கண்ணீர் விட்டு கதறுகிறார்.
சமூக ஆர்வலர் ரகத் ஆஸ்டின் அளித்துள்ள தகவலின்படி 14 வயது சிறுமி நசிபன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதற்காக கடத்திச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் இந்த சூழ்நிலையிலும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதைப் பார்த்தால் கண்கூடாகத் தெரிகிறது. இந்த மாதத்திலேயே ஜாகோபாபாத் பகுதியில் ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டார். மே மாதம் ஒரு இந்து சிறுமியும், காது கேளாத வாய் பேச இயலாத கிறிஸ்தவ சிறுமி ஒருவரும் வெவ்வேறு சமயங்களில் கடத்தப்பட்டனர். இதேபோல் ஏப்ரல் மாதமும் சிந்து மாகாணத்தில் இரண்டு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் நன்கானா சாகிப் குருத்வாராவில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் ஒரு சீக்கிய சிறுமியும் கடத்தப்பட்டார். தொடர்ச்சியாக சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை எதிர்த்து சில நாட்களுக்கு முன் இந்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி : Opindia