Kathir News
Begin typing your search above and press return to search.

14 நாடுகளின் விருது பெற்ற மோடி - மோடியின் தலைமை மற்றும் இந்தியாவுக்கான அங்கீகாரம்!

கடந்த 10 ஆண்டுகளில் குற்ற செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடியை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்கள் அவையில் அமைச்சர் கூறும் போது 14 நாடுகளின் விருதுகளை பெற்ற மோடி என்ற பெருமையை கூறியுள்ளார்.

14 நாடுகளின் விருது பெற்ற மோடி - மோடியின் தலைமை மற்றும் இந்தியாவுக்கான அங்கீகாரம்!

KarthigaBy : Karthiga

  |  15 Dec 2023 5:00 AM GMT

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது :-


கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த அக்டோபர் 31ம் தேதி வரை குற்ற செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல் மேற்கண்ட கால கட்டத்தில் அச்சட்டத்தின் கீழ் ரூபாய் 16 ஆயிரத்து 637 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது.


கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் குற்றச் செயல்களில் ஈட்டப்பட்ட ரூபாய் 69 ஆயிரம் கோடி வருவாய் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு பேரை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. மேலும் 3 பேரை நாடு கடத்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி கூறியதாவது:-


பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளன கடந்த 2013 ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கையில் 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மாயமானதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் 74 நினைவு சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது :-


5ஜி செல் ஃபோன் நெட்ஒர்க் விமான சேவைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து மத்திய அரசு எந்த ஆய்வும் நடத்தவில்லை .ஆனால் பிற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பரிசீலித்தது. அதன்படி 5ஜி சி-பாண்டு ஸ்பெக்ட்ரம் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ உயரமானிக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அது பாதுகாப்பற்ற விமான பயணத்துக்கு வழி வகுக்கக்கூடும். எனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விமான நிலையங்கள் அருகே 5ஜி செல்ஃபோன் கோபுரத்தை அமைக்கும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.


மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மதிய வெளியிடும் இனிய மந்திரி முரளிதரன் கூறியதாவது :- கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி 14 நாடுகளின் உயரிய தேசிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.நாவின் உயரிய சுற்றுச்சூழல் விருதை பெற்றார். இந்த விருதுகள் அவரது தலைமை மற்றும் இந்தியாவுக்கான அங்கீகாரத்தை உணர்த்துகிறது இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News