140 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட கெளரவம்.. அதுவும் ஒற்றை மனிதரால் சாத்தியமானது எப்படி.?
By : Bharathi Latha
திம்புவில் உள்ள டெண்ட்ரெல்தாங்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பூடானின் மிக உயரிய விருதான ட்ருக் கியால்போ (Druk Gyalpo) விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் மன்னர் வழங்கினார். இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். 2021-ம் ஆண்டு டிசம்பரில் திம்புவில் உள்ள தஷிச்சோங்கில் நடைபெற்ற பூட்டானின் 114-வது தேசிய தின கொண்டாட்டங்களின் போது பூட்டான் மன்னர் இந்த விருதைப் பிரதமருக்கு அறிவித்திருந்தார். இந்தியா-பூட்டான் நட்புறவை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பையும், மக்களை மையமாகக் கொண்ட தலைமையையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது அவரது தலைமையின் கீழ் உலகளாவிய சக்தியாக வளர்ந்துள்ள இந்தியாவின் எழுச்சியைக் கௌரவிப்பதாகவும், இந்தியாவுடனான பூட்டானின் சிறப்பு பிணைப்பைக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது என்றும் விருதுடன் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட கெளரவம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான உறவுகளுக்கு ஒரு சான்று என்றும் பிரதமர் கூறினார். ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ (Order of the Druk Gyalpo) விருது, வாழ்நாள் சாதனைக்கான கெளரவ விருதாக அமைந்துள்ளது. பூட்டானின் உயரிய விருது இதுவாகும்.
Input & Image courtesy: News