மினி வேனில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்திய தி.மு.க செயலாளர் கைது - மக்களின் பொருளை கடத்தும் அட்டூழியம்!
மினி வேனில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்திய தி.மு.க செயலாளர் கைது - மக்களின் பொருளை கடத்தும் அட்டூழியம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு மினிவேனில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற தி.மு.க. செயலாளரும் மற்றும் வண்டியின் ஓட்டுநரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் இருக்கும் பாரதி நகரில் அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் நாகபுஷ்பம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனை நடத்திய காவல்துறையினர் அந்த வேனில் இருந்து நான்கு டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி சென்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மினி வேனில் இருந்த 4 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மினி வேன் ஓட்டுநர் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் முதல் கட்டமாக மினிவேனின் உரிமையாளர் வாணியம்பாடி தும்பேரி பாரதி நகர் பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் வேலுவின் சொந்த வண்டி என்பது தெரிய வந்தது.
இவர்கள் தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஓட்டுநரிடம் இருந்து பறிமுதல் செய்த நான்கு டன் ரேஷன் அரிசியை வாணியம்பாடியில் இருக்கும் தமிழ்நாடு குடிமைப்பொருள் கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே ரேஷன் அரிசியை கடத்தி சென்ற மினி வேன் உரிமையாளரும் மற்றும் திமுக கிளைச் செயலாளருமான வேலுவை சிலர் வடிவேலுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.