மற்ற மாநிலத்தவர்களும் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் - கேஜ்ரிவாலை மீறிய டெல்லி கவர்னர் உத்தரவால் பரபரப்பு!
மற்ற மாநிலத்தவர்களும் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் - கேஜ்ரிவாலை மீறிய டெல்லி கவர்னர் உத்தரவால் பரபரப்பு!

By : Kathir Webdesk
டெல்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெல்லி மாநில மக்களுக்கு மட்டுமே இனி கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மற்ற மாநிலங்களை சேர்ந்தோர் மத்திய அரசின் மருத்துவமனைகளுக்கு செல்லலாம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
போதுமான படுக்கைகள் இல்லை என்றும், இருக்கும் அனைத்து வசதிகளும் டெல்லி மக்களுக்கே போதுமான அளவில் இருக்கும் என்றும் கூறி இருந்தார். நாட்டின் தலை நகரம் உள்ள மாநிலத்தின் முதல்வரான அவர் இவ்வாறு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து மாநிலத்தவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என்றும் அதற்கான கூடுதல் வசதிகள் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் துணை ஆளுநர் இன்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை என்று கூறியிருந்த நிலையில் துணை ஆளுநர் இப்படி ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது அங்கு மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
