பிரதமர் மோடி அரசு ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம் - ராணுவ உயரதிகாரி.!
பிரதமர் மோடி அரசு ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம் - ராணுவ உயரதிகாரி.!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடியின் அரசு நீக்கியதை அங்கிருக்கும் மக்கள் முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டனர். தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருவதால் மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் மீண்டும் கட்டுக் கதைகளை கூறி வருகிறது என ராணுவ உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை சென்ற ஆண்டு 370 பிரிவின் படி ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாக பிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புராணுவ பிரிவின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல், பி.எஸ். ராஜு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனைப் பற்றி அவர் கூறியது: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை விளக்கியதை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டனர் மற்றும் அப்பகுதியில் படிப்படியாக அமைதியான சூழல் திரும்பி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் அமைதியான சூழல் வந்ததை மக்கள் உணர்ந்தனர். பின்பு மக்கள் மகிழ்ச்சியுடன் வெளியே சுற்றி வந்தனர் மற்றும் குளிர்கால சுற்றுலா இடங்கள் அதிகமாக துவங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்து சமயத்தில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தொடர்ந்து கட்டுக்கதை சொல்லிக் கொண்டு வருகிறது. இதனை அப்பகுதியில் மக்கள் எவரும் நம்பவில்லை என அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2554640