சிறுமியின் நாக்கை வெட்டி பிராமணர்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுத்ததாக டுவிட்டரில் பொய் செய்தி - இடது சாரிகள், சிறுபான்மையினர் பரப்பியதாக விசாரணையில் தகவல்.!
சிறுமியின் நாக்கை வெட்டி பிராமணர்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுத்ததாக டுவிட்டரில் பொய் செய்தி - இடது சாரிகள், சிறுபான்மையினர் பரப்பியதாக விசாரணையில் தகவல்.!

உத்தரபிரதேச மாநிலம் பண்டல் மாவட்டம் புண்டேல்கண்ட் கிராமம் அதிக அளவில் பிராமண மக்கள் வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள சிவன் கோவில் ஒன்றில் கொரோனா நோயில் இருந்து கிராம மக்களை காப்பாற்ற அங்குள்ள பிராமணர்கள் ஓன்று சேர்ந்து 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பிராமண சிறுமியின் நாக்கை அறுத்து அதை கடவுளுக்கு காணிக்கையாக படைத்ததாகவும், மூட நம்பிக்கை காரணமாக இதை செய்துள்ளதாகவும் கடந்த 2 நாட்களாக டுவிட்டரில் செய்திகள் பரவின.
மைகரன்ட் கம்ரான் என்ற ஒரு டுவிட்டர் பயனர் மூலமாக செய்திகள் பரப்பினர். இது காட்டுத்தீயாய் பல ஊடகங்கள் வழியாக மாநிலம் முழுவதும் பரவியது. இதை இந்துக்களின் மத தியாகம் என்றும் கம்ரான் எனப்படும் இஸ்லாமியர் வருணித்திருந்தார்.
இது பற்றி உண்மைகளை அறியும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு லால் பாரத் குமார் பால் அந்த கிராமத்துக்கு சென்றார். விசாரணையில் அந்த சிறுமி யாருமற்ற சூழ்நிலையில் கோவிலுக்கு சென்று தனக்குத் தானே ஒரு வேண்டுதலின் பேரில் நாக்கை அறுத்துக் கொண்டதாகவும், இதில் அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்ததாகவும், பிறகு சரியாகி தற்போது வீட்டில் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். இது மற்ற எவராலும் தூண்டப்படவில்லை என்றும் சிறுமி தனக்கு தானே செய்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தகவல் இங்குள்ள சில முஸ்லிம் மற்றும் இடது சாரி விஷமிகளால் திரிக்கப்பட்டு இந்து சமயத்தை அவமானப்படுத்த பொய்யாக பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.