கொரோனா சிகிச்சை : கெஜ்ரிவால் அரசின் உத்தரவை மாற்றி டெல்லி கவர்னர் அனில் பைஜால் அதிரடி -கலக்கத்தில் கெஜ்ரிவால்.!
கொரோனா சிகிச்சை : கெஜ்ரிவால் அரசின் உத்தரவை மாற்றி டெல்லி கவர்னர் அனில் பைஜால் அதிரடி -கலக்கத்தில் கெஜ்ரிவால்.!
By : Kathir Webdesk
இந்தியாவில் சர்ச்சைக்கு பேரு பெற்ற நபர் என்றால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தான் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவின் அனைத்து பகுதி மருத்துவ மனைகளிலும் மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்ளளாம் அது கூட தெரியாத புரியாத முதல்வாரக இருக்கும் கெஜ்ரிவால் செயலை வறுத்து எடுக்கும் டெல்லி பாஜக இளைஞர் அணி.
டெல்லி மாநில மக்கள் மட்டும் தான் டெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடியும் என டெல்லி முதல்வர் உத்தரவு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் உள்ளூர் மக்களுக்கே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அம்மாநில கவர்னர் மாற்றி உள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி மாநிலத்தின் ஒட்டுமொத்த நோய் பாதிப்பு எண்ணிக்கை ஞாயிறன்று 28,936 என உயர்ந்தது. இது மேலும் அதிகரிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் கூறுகையில் டெல்லியில் நோய் பரவல் விகிதம் 14 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. தற்போதைய நிலையில் டெல்லியில் அடுத்த இரண்டு வாரங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 56,000ஐ தொடும் என நாங்கள் அமைத்த நிபுணர் குழு மதிப்பீடு செய்துள்ளது. டெல்லியிலுள்ள மருத்துவமனை படுக்கை வசதிகள் அனைத்தும் டெல்லிவாழ் மக்களுக்கு மட்டுமே என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது'' என்றார்.
கெஜ்ரிவால் அரசின் இம்முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படு்தியது. டெல்லி மாநில அரசின் உத்தரவை அம்மாநில கவர்னர் அனில் பைஜால் மாற்றி உள்ளார்.ஆளுநர் உத்தரவு படி டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் என்று கவர்னர் அலுவகம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் அரசின் செயல்பட்டால் டெல்லி கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகி உள்ளது