இந்திய எல்லையை ஆக்கிரமிப்பு செய்வது விளையாட்டு அல்ல - அமித் ஷா காட்டம்.!
இந்திய எல்லையை ஆக்கிரமிப்பு செய்வது விளையாட்டு அல்ல - அமித் ஷா காட்டம்.!

இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து குழந்தை விளையாட்டு அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கூட்டம் ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கூறியது: புல்வாமா மற்றும் உரி தாக்குதல் பற்றி பேசினார். பின்பு இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் பிரதமர் மோடி அவர்கள் இரண்டு கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக இல்லை. பாகிஸ்தான் நாட்டுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக சர்ஜிகல் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினார்.
இந்தியாவின் எல்லை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை ஒரு போதும் இந்தியா பொறுக்காது என்பதற்கு இதனை கூறியதாகவும் மற்றும் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக எச்சரித்துள்ளார்.
எட்டு பா.ஜ.க எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதற்கு ஒடிசா மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில், 130 கோடி மக்கள் வீட்டிலேயே இருந்து கொரோனாவை எதிர்த்து தங்களுடைய போராட்டத்திற்கு ஒத்துழைத்தனர் என கூறினார். கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு "தனித்துவமான" போராட்டத்தை நடத்தியதற்காக பிரதமர் மோடியை அமித்ஷா வாழ்த்தினர்.
மேலும், கொரோனா வைரஸை பற்றி வரலாற்றில் எழுதப்படும்போது," ஜனதா ஊரடங்கு உத்தரவு " என பொன்னான எழுத்துக்களில் குறிப்பிடப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
Source: https://www.polimernews.com/dnews/111685