'கொரோனா' காரணம் காட்டி விசாரணைக்கு வர மறுத்த ஊழல் காங்கிரஸ் தலைவர் - 'வீட்டிற்கு வந்து கேள்வி கேட்கிறோம்' எனும் அமலாக்கத் துறை!
'கொரோனா' காரணம் காட்டி விசாரணைக்கு வர மறுத்த ஊழல் காங்கிரஸ் தலைவர் - 'வீட்டிற்கு வந்து கேள்வி கேட்கிறோம்' எனும் அமலாக்கத் துறை!

14,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சண்டேசரா ஊழல் வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் அஹ்மத் படேலை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்திருந்தது. நாளை விசாரணை நடைபெற இருந்த வேளையில், தான் 65 வயதுக்கு மேற்பட்டவர் ஆதலால் கொரானா விதிமுறைகளின் படி, தான் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு வர முடியாது என்றும் அஹ்மத் படேல் அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். விசாரணையிலிருந்து தப்பிக்க கொரானாவை சாக்காக கூறுகிறார்.
ஆனால் அமலாக்கத் துறை ஒருபடி மேலாக சென்று வீட்டுக்கு வந்து கேள்வி கேட்கப்படும் என்று பதில் அளித்துள்ளது. புதிய தேதிகளையும் அறிவித்துள்ளது.
#Breaking 1st on TIMES NOW | Day before @ahmedpatel's @dir_ED appearance over Sandesara scam, he cites 'Corona' to avoid saying 'above 65, please excuse now'.
— TIMES NOW (@TimesNow) June 8, 2020
ED responds with new dates saying 'will come home to question'. pic.twitter.com/72U7gDgq2M
சண்டேசரா வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் தொடர்புக்கான ஆதாரம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்த வழக்கின் சாட்சிகளான அஹ்மத் படேல், அவரது மகன் பைசல் படேல் மற்றும் அவரது மருமகன் இர்பான் சித்திக் ஆகியோர் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணையில் இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆதாரங்களின்படி, அவரது மகன் பைசல் படேல் மற்றும் மருமகன் இர்பான் அகமது சித்திக் ஆகியோர் சந்தேசராவிடம் பணம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஸ்டெர்லிங் பயோடெக் பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமலாக்க இயக்குநரகம் அகமது படேலின் மகன் பைசல் படேலை வரவழைத்தது. ₹ 5,000 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருந்து நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேசரா சகோதரர்களுடனான தொடர்புக்காக பைசல் படேல் மீது ED விசாரணை நடத்தப்படுகிறது.
சம்மன்களைத் தவிர்ப்பதற்கு இது போன்ற காரணங்களைச் சொல்வது அஹ்மத் படேலின் வழக்கமான சாக்காக வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹவாலா மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான விசாரணை தொடர்பாக வருமான வரித் துறை, அஹ்மத் படேலை விசாரித்தபோது, அவர் ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை எனவும் பின்னர் மூச்சுத் திணறல் குறித்து புகார் அளித்து, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அகமத் படேல் பல விதமான பிரச்சனைகளிலும், முறைகேடுகளில் சிக்கி விசாரிக்கப்பட்டு வருகிறார். உதாரணமாக அகஸ்டா முறைகேட்டில் பிடிபட்டுள்ள கிறிஸ்டின் மைக்கேல் கூற்றின் படி AP என்று டைரிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது அஹ்மத் படேல் என்று கூறப்படுகிறது.