Begin typing your search above and press return to search.
மிகவும் சவாலான நேரத்தில் மற்றவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொள்வது அவசியம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தல்.!
மிகவும் சவாலான நேரத்தில் மற்றவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொள்வது அவசியம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தல்.!

By :
புதுச்சேரியில் நாளுக்கு, நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனிடையே ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் புதுச்சேரியில் மத வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார் அதில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதுதான் உங்கள் நலனை பாதுகாப்பதுடன் அடுத்தவர் நலனையும் பாதுகாக்கும்.
ஒவ்வொருவர் உடல் நலனையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இது மிகவும் சவாலான நேரம். மற்றவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொள்வது அவசியம். எனவே அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.
Next Story