Kathir News
Begin typing your search above and press return to search.

"உன்னைப் போன்ற பெண்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தான் ஏமாற்றினேன்"- மற்றுமொரு லவ் ஜிகாத் கொடூரம்!

"உன்னைப் போன்ற பெண்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தான் ஏமாற்றினேன்"- மற்றுமொரு லவ் ஜிகாத் கொடூரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jun 2020 2:17 AM GMT

உத்திரப் பிரதேச மாநிலம்‌ மீரட்டில் தினேஷ் ராவத் என்ற இந்து பெயரில் முகநூல் கணக்கு ‌தொடங்கி இந்து பெண்ணை வேண்டுமென்றே ஏமாற்றிய முஸ்லிம் இளைஞனை காவல்துறை கைது செய்துள்ளது. முதல் தகவலறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள தகவலின்படி "உன்னைப் போன்ற பெண்களுக்கு பாடம் கற்பிக்க விரும்புகிறேன்" என்று அவன் கூறியதாகத் தெரிகிறது.

ஸ்வராஜ்யா இணைய இதழுக்கு ஒரு காவல்துறை அதிகாரி அளித்த தகவலின்படி விசாரணையில் அந்த இளைஞன் ஒரு இந்து பெண்ணை இணையத்தில் அவமானப்படுத்துவதே அவனது நோக்கம் என்று கூறியுள்ளான். இவ்வாறு முஸ்லிம் ஆண்கள் இந்து பெயரை கூறி வேண்டுமென்றே இந்து பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி அவர்கள் அந்தரங்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களையும் காணொளிகளையும் பொதுவெளியில் பதிவிட்டு அவமானப்படுத்தும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞன்‌ மீரட்‌டில் உள்ள அர்ஜரா என்ற கிராமத்தைச் சேர்ந்த வசீம் அகமத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்பழிப்பு மற்றும் மோசடி புதிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள அசின் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான். அவனிடமிருந்து தினேஷ் குமார் ராவத் என்ற பெயரில் போலி ஆதார் கார்டு கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் அவனது ஓட்டுனர் உரிமமும் வாக்காளர் அடையாள அட்டையும் வசீம் அகமது என்ற பெயரில் உள்ளன. பிறந்த தேதி எல்லா ஆவணங்களும் ஒரே மாதிரியாக இருந்தபோதும் ஆதார் அட்டையில் மட்டும் முகவரி மாறியுள்ளது. தினேஷ் ராவத் என்ற பெயரில் போலியாக தயாரித்த ஆவணங்களை கொண்டு உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக அவன் ஒரு வருடம் பணி புரிந்ததும் தெரியவந்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின்படி தினேஷ் ராவத் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகிய வசியம் சில நாட்களுக்குப் பின் அவரது இல்லத்திற்கு அழைத்து அந்தரங்கமாக இருந்ததாகவும், அதன்பின் ஒருநாள் திருமணம் செய்துகொள்ள சொல்லி கேட்டபோது, தான் தனது உண்மையான பெயரை கூறி தான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்ற உண்மையையும் கூறியுள்ளான்.

மேலும் நான் உன்னைப் போன்றவர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பியதால் தான் உன்னை ஏமாற்றினேன் என்று அவன் கூறியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். வசீம் அகமத் இன்று அவனது உண்மையான பெயரில் தொடங்கிய முகநூல் கணக்கில் தன்னை பஞ்சாப் கேசரி என்ற இந்தி நாளிதழின் செய்தியாளராக அறிமுகப்படுத்தியுள்ளான். எனினும் அதற்கான ஆதாரம் எதையும் அவனால் காட்ட முடியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனது முகநூல் பக்கத்தில் அவனது பெயரில் வெளி வந்தது போல் ஃபோட்டோ ஷாப் செய்து செய்திகளைப் பகிர்ந்துள்ளான். அவனது‌ அலைபேசியை‌ கைப்பற்றிய காவல்துறையினர்‌ அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொளிக்காட்சி இருந்ததையும் அதை அவன் குடியிருக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கு பகிர்ந்ததையும்‌ உறுதி செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News