புதுச்சேரி : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது ஆல் பாஸ் - முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி.!
புதுச்சேரி : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது ஆல் பாஸ் - முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி.!

கொரோனாவால் ஊரடங்கு காரணமாக 10ஆம் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது மேலும் 10ஆம் வகுப்புகள் தேர்வுகள் நடத்த அரசு எடுத்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதனிடையே தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதனையடுத்து தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும், புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இது தொடர்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவிக்கும்போது, தமிழ்நாடு கல்விவாரியத்தை பின்பன்றி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் தற்போதைய நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த கூடாது என்று பல்வேறு தரப்பினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசின் பாடதிட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசும் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்து தற்போது தேர்வை ரத்து செய்துள்ளோம். மேலும் தமிழ்நாடு கல்வி வாரியத்தை பின்பற்றி மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் எனவும் இதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.