போட்டியின் கடைசி நேரத்தில் தான் டோனியின் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் - ராகுல் டிராவிட்.!
போட்டியின் கடைசி நேரத்தில் தான் டோனியின் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் - ராகுல் டிராவிட்.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனியின் அவருடைய முழு ஆட்டமே போட்டியின் போது கடைசி நேரத்தில்தான் வெளிப்படுத்துவார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு டோனி திரும்ப வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் அவர் இடம் பிடிப்பது நடக்கவில்லை. ஊரடங்கு சமயத்தில் பல வீரர்கள் எம்.எஸ் தோனி உடன் ஏற்பட்ட நிகழ்வுகளை சமூக வளையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது எ கலந்து கொண்டார் இஎஸ்பிஎன் கிரிக்கெட் இணையதளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடத்திய நிகழ்ச்சியில் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார்.
அதில் பேசிய ராகுல் டிராவிட்: எம்.எஸ் டோனி போட்டியின் இறுதி நேரத்தில் தான் அவருடைய ஆட்டத்தை பார்க்க முடியும். அந்த சமயத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மற்றும் இக்கட்டான சூழலில் சிறப்பாக விளையாடுவார். ஆனால், போட்டியின் முடிவை பற்றி அவர் மனதில் நினைக்க மாட்டார் போட்டியில் கடைசி வரை விளையாட வேண்டும் என நினைப்பார்.
இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.