புதுச்சேரி: கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கொரோனா - போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!
புதுச்சேரி: கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கொரோனா - போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!

புதுச்சேரி, சுப்பையா நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அறிவாலால் வெட்டப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த அவரை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தாக்குதல் குறித்து மூர்த்தி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலிசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த முகமது கில்லால், சதீஷ் , விக்னேஷ் உட்பட 4 பேரை கைது செய்து அவர்களை சிறையில் அடைப்பதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனை அழைத்து சென்றனர் அப்போது அங்கு பரிசோதனை செய்ததில் கைது செய்யப்பட்ட 5 நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவருடன் இருந்த 4 நபர்களையும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், கோரிமேடு, தன்வந்திரி காவல் நிலையம் முழுவதும் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொலை முயற்சி குற்றவாளியை கைது செய்த போலீசார் தங்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பீதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.