Kathir News
Begin typing your search above and press return to search.

தென்காசியில் பட்டா நிலத்தில் இருந்த ஹிந்துக் கோவிலை 'சிறுபான்மையினர்' புகாரால் இடித்த மாவட்ட நிர்வாகம் - கொந்தளிக்கும் கிராம மக்கள்!

தென்காசியில் பட்டா நிலத்தில் இருந்த ஹிந்துக் கோவிலை 'சிறுபான்மையினர்' புகாரால் இடித்த மாவட்ட நிர்வாகம் - கொந்தளிக்கும் கிராம மக்கள்!

தென்காசியில் பட்டா நிலத்தில் இருந்த ஹிந்துக் கோவிலை சிறுபான்மையினர் புகாரால் இடித்த மாவட்ட நிர்வாகம் - கொந்தளிக்கும் கிராம மக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2020 11:07 AM GMT

அண்மையில் தென்காசியில் அடிப்படை இஸ்லாமியர்களின் தூண்டுதலின் பேரில் நாடார் சமூகத்திற்கு சொந்தமான இந்து கோயில் இடிக்கப்பட்டுள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மாநில அரசு ஆகியவை இணைந்து இவ்வித செயல்களின் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம், கன்னியாகுமரியில் தனியார் பட்டா நிலத்தில் இருந்த ஒரு கோவிலின் வளாகத்தில் நிறுவப்பட்ட பாரத் மாதா சிலை ஒரு சில கிறிஸ்தவ மிஷனரிகளின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து போலிஸாரால் மூடப்பட்டது. பா.ஜ.க, இந்து முன்னணி போன்றோரின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, மூடிய துணியை போலீசார் அகற்றினர்.

தென்காசி மாவட்டத்தில், நாடார் சமூகம் முதன்மையாக சிறு வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. சம்பன்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவிலில் தலைமுறைகளாக ஒன்றாக அவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள் மற்றும் அதை குல தெய்வமாக கருதுகிறார்கள். இந்த கோயில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டது மற்றும் ஆண்டுதோறும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த குக்கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர், இங்குள்ள இஸ்லாமியர்களிடமிருந்து தொடர்ச்சியான இடையூறுகளால் இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களால் இந்துக்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI ) மற்றும் முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த சில அடிப்படைவாத இஸ்லாமியர்கள், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதவாத சண்டைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். சமீபத்தில், காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவிலில் புனரமைப்பிற்கு அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர், இது முஸ்லீம் பெண்கள் வெளியில் குளிக்கும் பிரைவசியை பாதிக்கிறது என்று கூறினர். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சிறுபான்மையினருக்கு சேவை செய்வது போல், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், இந்துக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கோயிலை நேரடியாக புல்டோசர் வைத்து இடித்து விட்டனர்.

மாவட்ட மாஜிஸ்திரேட்க்கு எழுதிய தனது புகாரில், சம்பங்குளத்தின் கிராமத் தலைவரான சுப்பையா நாடாரின் மகன் பச்சைமால், கிராமத்தில் 160-க்கும் மேற்பட்ட இந்து நாடர்கள் வாழ்கின்றனர், ஆனால் முஸ்லிம்கள் அவர்களை விட அதிகமாக உள்ளனர். அவர்களுடைய சமூக உறுப்பினர்களில் பெரும்பாலோர் கல்வியறிவற்றவர்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள் என்றார். "பட்டா எண்கள் 1598 மற்றும் 1376, தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவசைலம் கிராமத்தில் உள்ள எனது நிலத்தில், எங்களிடம் ஒரு வன தெய்வக் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில், மண் தளத்தை புதியதாக மாற்றி பண்டிகைகளை கொண்டாடுகிறோம்" என்று பச்சைமால் விளக்கினார்.

இருப்பினும், இந்த ஆண்டு, ஊரடங்கின் காரணமாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மழைக்காலங்களில் அரிக்கப்படுவதைத் தவிர்க்க நாங்கள் மண் தளத்தை மாற்ற வேண்டியிருந்தது. எனவே ஒரு சிமென்ட் தளத்தை அமைத்தோம் என பச்சைமால் விளக்குகிறார். இந்துக்கள் அனைவரும் முஸ்லிம்களுடன் சரியான நல்லிணக்கத்தைக் காத்து, ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாகவே நடந்து கொண்டு வருகிறோம். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர், எங்கள் கோயில் கட்டுமானத்தை எதிர்த்தனர், இது கோவிலின் பக்தர்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் எல்லோரும் குளிப்பதைப் பார்க்க அனுமதிக்கும் என்று கூறினர். "பெரும்பான்மையாக இருந்ததால், அவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்தினரிடமும், காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர். தாமதிக்காமல், காவல்துறையினர் JBC இயந்திரங்களுடன் கிராமத்தில் இறங்கி, எங்கள் அனைத்து வேண்டுகோள்களையும் புறக்கணித்து எங்கள் கோயிலை இடித்துத் தள்ளினர்", என்கிறார் பச்சைமால்.

"அவர்கள் பெரும்பான்மையான முஸ்லீம் சமூகத்தின் புகாரின் அடிப்படையில் கோயிலை இடித்தனர். இது எங்கள் கிராமத்தில் ஒரு வகுப்புவாத மோதலுக்கு வழி வகுக்கும்", என்று பச்சைமால் எச்சரிக்கிறார். நாங்கள் எந்தவொரு அரசாங்க நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை அல்லது புதிய கட்டுமானத்தை செய்யவில்லை" என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். "நாங்கள் தற்காலிக கூரையுடன் அந்த இடத்தை புதுப்பித்துள்ளோம். எங்கள் கோயிலால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். அடிப்படை அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட சிலர் மட்டுமே வகுப்புவாத நல்லிணக்கத்தை அழித்து உண்மையை மறைக்க விரும்புகிறார்கள். எங்கள் பட்டா நிலத்தில் உடனடியாக ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாக நாடார் சமூகம் உணர்கிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்வதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரை மகிழ்விக்க எடப்பாடி பழனிசாமி நிர்வாகம் இவ்வாறு செய்யலாம் என்ற குற்றச்சாட்டுக்கு இது நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இந்து மகா சபா தலைவர் தா.பாலசுப்பிரமணியம் இடிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று கோயிலைக் கட்டியெழுப்ப தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்து முன்ணனி மற்றும் பிற இந்து அமைப்புகள் கிராமத்தின் இந்துக்களை ஆதரிக்கின்றன. அதே இடத்தில் ஒரு பெரிய கோயில் கட்டப்படும் என்று அவர்களுக்கு உறுதியளித்தனர்

Source & Cover Image Courtesy : Organiser Weekly

Next Story
கதிர் தொகுப்பு
Trending News