Kathir News
Begin typing your search above and press return to search.

சலசலக்கும் மாவட்ட அளவிலான கட்டமைப்பு - நம்பிக்கை தொலைத்த நிர்வாகிகள்! ஆட்டம் காணுகிறதா தி.மு.க அஸ்திவாரம்? - ஒர் அலசல்!

சலசலக்கும் மாவட்ட அளவிலான கட்டமைப்பு - நம்பிக்கை தொலைத்த நிர்வாகிகள்! ஆட்டம் காணுகிறதா தி.மு.க அஸ்திவாரம்? - ஒர் அலசல்!

சலசலக்கும் மாவட்ட அளவிலான கட்டமைப்பு - நம்பிக்கை தொலைத்த நிர்வாகிகள்! ஆட்டம் காணுகிறதா தி.மு.க அஸ்திவாரம்? - ஒர் அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2020 12:42 PM GMT

ஐந்து முறை ஆட்சி, அசைக்க முடியாத மீடியா பலம், எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு பணபலம், முதற்கட்ட, இரண்டாம் கட்ட வலுவான தலைவர்கள் இப்படிபட்ட பெருமைகளை உள்ளடக்கிய தி.மு.க என்று சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் அதன் தலைவர்கள் முதல் அவர்களை சார்ந்து இருக்கு உடன்பிறப்புகள் வரை கோஷமிடுவது இந்த பெருமைதான்.

ஆனால், அடிமட்ட அளவிலான நிர்வாகிகளின் மனநிலை, நகர, ஊர்ப்புற நிர்வாகிகளின் எண்ண ஓட்டங்கள் என்ன சொல்கிறது பார்க்கலாம். இது தொடர்பாக என்றும் கரை வேட்டியை கூட மாற்ற மனமில்லாமல் தலைவர் கலைஞர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், உதய் அழைக்கிறார் என்று ஓடிக்கொண்டிருக்கும் நிர்வாகிகள் சிலரை நிறுத்தி பேச்சு குடுத்ததில் பல விரக்திகள் வெளிவந்தன. அதனை கொஞ்சம் பார்ப்போம்.

ஒரு நகர அளவில் பொறுப்பில் உள்ள நிர்வாகியிடம் கேட்டதற்க்கு கிடைத்த பதில், "தம்பி தி.மு.க'ன்றது கட்சி இல்லை அது ஒர் உணர்வு, அதுல இருக்குறதையே அவ்ளோ கெத்தா சொல்லுவோம், கரைவேட்டி கட்டுனா பெருமையா இருக்கும்'ன்னு நானும் என் சில சகா'க்களும் தலைவர் கலைஞர் முன்னிலையில் உறுப்பினரா சேர்ந்தோம். உழைப்புன்னா அப்படி உழைப்போம் இப்பதான் தம்பி ப்ளக்ஸ் அது, இது எல்லாம் அப்பல்லாம் தட்டி, சுவர் பெயிண்டிங்க, டயர்'ல துணிய கட்டி கம்பத்துல கட்றதுதான் பெரிய விளம்பரம் அதை ராத்திரி பூரா செஞ்சுட்டு சுத்திட்டு கிடப்போம் அடுத்த நாள் பகல் ஃபுல்லா மீட்டிங் வேலை, சால்வை போத்துறது'ன்னு தலைவர்க்காக கிடந்து தவிப்போம் கடைசியா மீட்டிங் முடிச்சு தலைவர் கிளம்புற வரை ஒருவாய் சாப்பாடு கூட இறங்காது. ஆனா இப்ப அந்த ஆர்வமே இல்லை தம்பி ஏதோ மீட்டிங்'ன்னா பயலுகள விட்டா டிசைன் பண்ணிட்டு ப்ளக்ஸ் போட்ருவானுங்க, தலைவர் கலைஞர் பேசினா அவர் கிளம்பற வரைக்கும் ஊரே திரண்டு நிக்கும் "என் உயிரினும் மேலான்'ன்னு ஆரமிச்சா சத்தம் காத பொளக்கும், ஆனா இப்ப தளபதியே வந்தாலும் ஆளுங்கள பத்தி இழுத்துட்டு வர்றத்துக்குள்ள உசுரு போய் வந்துடுது. அதுக்கும் கூட நாலு பேர் வந்து இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க'ன்னு புதுசா கிளப்பிவிடுறானுங்க அவன்லாம் கட்சில பாத்ததே இல்லை. இதெல்லாம் தளபதிக்கு தெரிஞ்சு நடக்குதா? இல்லை தெரியாம நடக்குதா'ன்னு ஒன்னுமே புரியல! ஆனா ஒன்னு தம்பி நாங்க இந்த கரைவேட்டி கட்றதையே அவ்ளோ மரியாதையா கட்டுவோம் ஆனா இன்னைக்கு வீட்ல இருக்குறதுங்களே திமுக'காரன் திருட்டு'ன்னு வர்ற நியூஸ காமிச்சு சிரிக்குதுங்க. தலைவர் கலைஞர் ஒருத்தருக்காக வந்தோம் இப்ப ஏன் இருக்கோம்'ன்னே தெரியலை"ன்னு முடித்துக்கொண்டார்.

மேலும், மாவட்ட அளவிலான இளைஞரணி பொறுப்பில் உள்ளவரிடம் பேசினோம்,

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஆரமித்தார், "என்னங்க செலவு பண்ணி கட்டுபடியாகலைங்க, காசு தண்ணியா போகுது. சும்மா தொட்டதுக்கெல்லாம் காசு, சரி நம்மலும் எலெக்ஷன் வந்தா ஒரு சீட் ஏதும் வாங்கலாம்'ன்னு பாத்தா அதுவும் செலவு பண்ணி ஜெயிப்போமா'ன்னே தெரியலை போற போக்க பாத்தா! வீட்ல வொய்ப் அப்பவே ஒரு சூப்பர் மார்க்கெட் வச்சுருந்தா சம்பாதிச்சுருக்கலாம், எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே சுத்துவீங்க'ன்னு அப்பா கேட்குறார்'ன்னு குத்தி காமிக்குறா! அதனாலயே பயந்துகிட்டு சமீபத்துல ஒரு பொறுப்பு வந்துச்சு எவன் காசு தண்ணியா செலவு பண்றதுன்னு நினைச்சுகிட்டே "புதுசா வர்றவங்களுக்கு வாய்ப்பு குடுப்போம்'ன்னு பாலிசா ஒதுங்கிட்டேன், இப்ப அந்த பொறுப்புக்கு வந்தவன் இதுவரைக்கும் 9 லட்சம் காலி பண்ணியிருக்கான் நான் ஃபோன் பண்ணாலே எடுக்குறது கிடையாது. அவன் கஷ்டம் அவனுக்கு!", கடைசியாக, "பாப்போம் ஒரு ஒரு வருஷம் தாக்கு பிடிக்கலாம் அப்புறம் போங்கப்பா நீங்களும் உங்க கட்சி'யும்ன்னு விலகிடலாம்'ன்னு இருக்கேன் என்கிறார்.

இந்த மாதிரியான தகவல்களை கட்சி அடிமட்ட பொறுப்பாளர்களிடம் இருந்து கேட்க்கும் போது ஒன்று தோன்றியது "மவுண்ட் ரோடில் இருக்கும் ஸ்பென்சர் ப்ளாஸா, ஒரு காலத்தில் அது பெரிய ஷாப்பிங் மால், சூட்டிங் ஸ்பாட், ஏரியாவின் அடையாளம் இப்படி எல்லாம் இருந்தது ஆனா இப்போது ஆள் நடமாட்டம் குறைந்து திகில் படங்கள் எடுக்க நல்ல இடமாகி உள்ளது! இந்த நிலை நீடித்தால் "அடுத்த ஸ்பென்சர் ப்ளாசா அறிவாலயம்'தான்".

Next Story
கதிர் தொகுப்பு
Trending News