மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் அதிக பரிசோதனை நடத்தப்படுகிறது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.!
மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் அதிக பரிசோதனை நடத்தப்படுகிறது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா அளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் தமிழ்நாட்டில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக 2,000 செவிலியர்களை இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பணி நியமனம் ஆணையை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார்.
பின்னர் அவர் பேசியது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களுக்கு செவிலியர்கள் குறைப்பாடு இருக்காது.
சென்னையில் நோயாளிக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கும் வேலை செய்யப்பட்டு வருகிறது. அரசு மக்களுக்குகாக இரவு, பகல் பாராமலும் மற்றும் ஓய்வு இல்லாமல் வேலை பார்க்கின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் விட தமிழ்நாட்டில் அதிக பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பரிசோதனை அதிகமாக செய்வதால் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க முடிகிறது என கூறியுள்ளார்.