தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்களைக் கணக்கெடுக்கச் செல்பவர்களைத் தடுக்கும் சிறுபான்மையினர் - அரசின் சதி என்று சொல்லி ஒரே அடம் பிடிப்பு!
தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்களைக் கணக்கெடுக்கச் செல்பவர்களைத் தடுக்கும் சிறுபான்மையினர் - அரசின் சதி என்று சொல்லி ஒரே அடம் பிடிப்பு!

By : Kathir Webdesk
அவுரங்காபாத்தில் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் உடல் நிலை குறித்த கணக்கெடுப்பில் மதகுருமார்களின் உதவி நாடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தின் சில பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் ஒத்துழைப்பதில்லை என்று புகார் வந்ததன் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவுரங்காபாத் துணை ஆணையர் அஞ்சலி தனோர்கர் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள முதியவர்களை முக்கிய இலக்காக வைத்து நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு அவுரங்காபாத்தில் இருக்கும் ஒன்பது மண்டலங்களில் நடைபெறுகிறது.
"மாவட்டத்தின் சில பகுதிகளில், குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தகுந்த ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர். உள்ளூர்வாசிகள் சுகாதாரப் பணியாளர்களை அவர்களது பகுதிக்குள் நுழையவே விடுவதில்லை என்றும் அப்படியே விட்டாலும் கணக்கெடுப்பின் முக்கிய இலக்கான முதியவர்களை பற்றிய தகவல்களை தர மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு ஒத்துழைக்க மறுப்பதற்கு இந்த கணக்கெடுப்பின் பின் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சிறுபான்மையினர் காரணம் கூறுகின்றனர்." என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
எனவே, முல்லாக்கள் மௌல்விக்கள் மற்றும் பிற மத குருமார்களை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் எந்த பிரச்சனையும் இன்றி ஒத்துழைப்பை பெற உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
