Kathir News
Begin typing your search above and press return to search.

துளசி என்பது வெறும் செடி மட்டும்தானா? - ஆன்மீக மற்றும் ஆரோக்கிய பார்வை.!

துளசி என்பது வெறும் செடி மட்டும்தானா? - ஆன்மீக மற்றும் ஆரோக்கிய பார்வை.!

துளசி என்பது வெறும் செடி மட்டும்தானா? - ஆன்மீக மற்றும் ஆரோக்கிய பார்வை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jun 2020 2:00 AM GMT

துளசி புனிதமான தாவரமாக இந்தியாவில் கருதப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. மற்ற செடி, கொடிகளை காட்டிலும் சூரியனிடமிருந்து அதிகமான வெப்பத்தை ஈர்ப்பதாலேயே கொளுத்தும் வெயிலிலும் கூட துளசி பிரகாசமாக தளைத்திருக்கிறது. சூரிய வெளிச்சத்தினால் இதன் இலை பெரிதாகவும் மற்றும் அடர்த்தியானதாகவும் இருக்கும். சமயங்களில் அடர் பச்சை அல்லது கருப்பு நிற சாயலையும் இது பெற்றிருக்கும் இந்த ரக துளசியை கிருஷ்ண துளசி அல்லது கருப்பு துளசி என்று அழைக்கிறார்கள்.

ஆனால் எதற்காக துளசிக்கு இத்தனை மகத்துவம்? ஏன் இது மற்ற செடி கொடிகளை காட்டிலும் இத்தனை பிரபலம்? காரணம் அதன் மருத்துவ குணங்களும் தெய்வாம்சம் பொருந்திய புராண பின்னனியும்.

இயற்கையிலேயே இன்று இருக்கக்கூடிய தட்ப வெட்ப சூழலில் நம் அனைவரையும் உடல்நல ரீதியில் பாதிக்கக்கூடிய பொதுவான விஷயம் சளிப்பிடித்தல். இந்த பிரச்சனைக்கு அருமருந்தாக ஆயுர்வேதத்தில் கருதப்படுவது துளசி. இதற்கு அதீதமான கபத்தையும், வாதத்தையும் அழிக்கக்கூடிய தன்மை வல்லமை உண்டு. துளசிச்சாறு தேனுடன் எடுத்து கொள்கிற போது சளிப்போன்ற கப பிரச்ச்னைகளுக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட கூடிய மருந்தாக அது அமைகிறது.

நாம் வழக்கமாக அருந்துகிற தேநீரில் இரண்டு இலைகளை கசக்கி அதன் சாறு படியுமாறு அருந்தினாலே அது நம் சளிக்கு எதிரான எதிர்ப்புச்சத்தியை அதிகரிக்கும்.

துளசி என்பது மிகத்தீவிரமான ஒரு ருசியை கொண்டது. அதன் மணம் தெய்வீகத்தன்மை கொண்டது. துளசி உடலுக்கு சூடு என்று பொதுவாக சொல்லப்படுவது உண்டு. ஆனால் ஆய்வின் படி துளசி பித்தத்தை கூட்டாது அன்றி உடலில் உள்ள உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.

பெரும் மகத்துவம் வாய்ந்த துளசியை பெரும்பாலான குடும்பங்கள் வீடுகள் தோறும் வைத்து வளர்ப்பதை நம்மால் காண முடியும். எதற்காக செடி வளர்ப்பில் துளசிக்கு இத்தனை பாரம்பரியமிக்க முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. காரணம் துளசியினால் உடலுக்கும் மனதுக்கும் தீங்கிழைக்கக்கூடிய கிருமிகளை அழிக்க முடியும். மாறாக துஷ்டம் என சொல்லப்படுகிற எதிர்மறை ஆற்றலை தடுக்கிறது.

ஆன்மீக ரீதியில் சொல்லப்படும் ஆரா என்னும் ஒரு சூட்சும ஆற்றல் வளையம் துளசிக்கும் உண்டு. துளசிச்செடியின் அருகே ஒரு தீபத்தை ஏற்றுகிற போது அதன் ஒளியினால் துளசியின் ஆரா வலுவடைந்து எதிர்மறை ஆற்றலை எதிர்கிற தன் வல்லமை மென்மேலும் பெருகம் என்பது நம்பிக்கை.

துளசிசெடியிற்கு புராணரீதியாகவும் அதீத முக்கியத்துவம் உண்டு. திருமாலுக்கு உகந்த செடியென்றும். விஷ்ணு தன் இருப்பிடமாக துளசியை கொண்டிருக்கார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

மேலும் துளசி என்கிற செடியினுள் மருத்துவரீதியாக பிராண சக்தியாக விளங்கக்கூடிய ஆக்ஸிஜனுக்கு உறுதுணையாக இருக்கும் தன்மை உண்டு அதனாலேயே இது மற்ற செடிகளை விடவும் அதீத தனித்துவம் மிக்கதாக திகழ்கிறது.

எனவே பாரம்பரியத்தில் துளசியின் இடம் நிகரற்றது. கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த துளசி என்கிற இந்த செடியின் மகத்துவம் உண்மையில் இந்தியர்களின் வாழ்வியல் சார்ந்தது. குடும்ப அமைப்பில் இதுவும் ஒரு அங்கமாக கருதப்படுவதும் உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News