Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Jun 2020 12:45 PM GMT

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் வேலையில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 8 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 202ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்கால், மாஹே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மரில் என 103நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 95நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது என புதுச்சேரி சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் புதுச்சேரியில் நேற்று 12பேருக்கும் இன்று 18பேருக்கும் என அதிகரித்து கொண்டே வருகின்றது. இதை பார்க்கும் போது கொரோனா தொற்றின் தாக்கம் புதுச்சேரியில் தீவிரமடைய தொடங்கி விட்டதையே காட்டுகின்றது.

ஆகவே இதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் தங்களை சுயகட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் எனவும், வெளியில் அதிகம் சுற்றுவதை நிறுத்திக்கொண்டு முககவசம் அணிவதை கட்டாயாமாக்கிக்கொண்டு விரதம் இருப்பது போல் தங்களை தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News