Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரான் நாட்டில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த இந்தியா உதவி - உலக நாடுகளின் ஆபத்பாண்டவனாக திகழும் இந்தியா, குவியும் பாராட்டுக்கள்.!

ஈரான் நாட்டில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த இந்தியா உதவி - உலக நாடுகளின் ஆபத்பாண்டவனாக திகழும் இந்தியா, குவியும் பாராட்டுக்கள்.!

ஈரான் நாட்டில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த இந்தியா உதவி - உலக நாடுகளின் ஆபத்பாண்டவனாக திகழும் இந்தியா, குவியும் பாராட்டுக்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Jun 2020 1:48 AM GMT

வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமும் நாட்டின் முன்னணி பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனமுமான ஹெச்.ஐ.எல் (இந்தியா) லிமிட்டெட் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுத் திட்ட முன்னெடுப்பாக அரசுக்கு-அரசு-உதவி என்பதன் கீழ் ஈரானுக்கு 25 மெட்ரிக் டன் மாலத்தியான் 95% யூ.எல்.வி பூச்சிக்கொல்லி மருந்தை அனுப்பியுள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் பிரச்சினையை எதிர்கொண்டு அதற்குத் தீர்வு காண ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஈரான் மற்றும் பாகிஸ்தானை இந்தியா அண்மையில் அணுகியது.

இந்த முன்மொழிவுக்கு ஈரான் தனது விருப்பத்தைத் தெரிவித்தது. அதற்கேற்ப வெளியுறவு அமைச்சகமானது ஈரானுக்கு 25 மெட்ரிக் டன் மாலத்தியான் 95% யூ.எல்.வி பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரித்து விநியோகிப்பதற்கு ஹெச்.ஐ.எல் (இந்தியா) லிமிட்டெட்டுக்கு அனுமதி ஆணையை வழங்கியது.

அதன்படி இந்தச் சரக்குப் பெட்டகம் 16 ஜுன் 2020 அன்று ஈரானுக்குப் போய்ச் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO), அறிக்கையின் படி ஈரானின் சிஸ்டன்-பலுசிஸ்தான் பிராந்தியத்தில் இளம் பூச்சி நிலையில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகள் வரும் மாதங்களில் வளர்ந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்து பயிர்களை நாசமாக்கும். எனவே இந்திய அரசு இந்த வெட்டுக்கிளி பிரச்சினையை அது உருவாகும் இடத்திலேயே அழிக்கக்கூடிய முன்னெடுப்பு நடவடிக்கைக்காக ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுக்க ஈரானை அணுகுகிறது.

ஆப்ரிக்கா, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பம் ஆகிய பகுதிகளில் பயிர்களைக் கடுமையாக நாசமாக்கிய பாலைவன வெட்டுக்கிளிகள் மார்ச் / ஏப்ரல் 2020ல் இந்தியாவிற்குள் நுழைந்த இவை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பயிர்கள், தோட்டக்கலைத் தாவரங்கள் மற்றும் இதர தாவரங்களை அழிக்கத் தொடங்கின.

தற்போது நாட்டில் வெட்டுக்கிளிகள் மோசமாகப் படையெடுத்து வந்துள்ளன. இதற்கு முன் அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டுக்கிளிப் படையெடுப்பு இந்தியாவில் நடந்துள்ளது.

நம்நாட்டில் வேளாண் அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நல வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கும் ஹெச்.ஐ.எல் (இந்தியா) லிமிட்டட் ஏற்கனவே மாலத்தியான் 95% யூ.எல்.வி பூச்சிக்கொல்லி மருந்தை வழங்கியுள்ளது.

2019 முதல் இன்று வரை இந்தக் கம்பெனியானது இந்தத் திட்டத்துக்காக இதுவரை 600 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மாலத்தியான் 95% யூ.எல்.வி பூச்சிக்கொல்லி மருந்தை வழங்கியுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News