14,800 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு தடை! மதமாற்றத்தில் ஈடுபட்டதா?
14,800 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு தடை! மதமாற்றத்தில் ஈடுபட்டதா?
By : Kathir Webdesk
மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார் திரு. நரேந்திர மோடிஅவர்கள். நாட்டில் புழங்கும் கருப்பு பணத்திற்கு எதிராக பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்தது மோடி தலைமையிலான அரசு.
கருப்பு பண பதுக்களில் தொண்டுநிறுவனங்கள் ஈடுபட்டு வருவது மத்திய அரசிற்கு தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தது வரும் பணத்தை கொண்டு மதமாற்றத்திலும் ஈடுபட்டது அரசிற்கு வரிகட்டாமல் தப்பிப்பதற்காக அரசியல் வாதிகள் தொண்டு நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர் .
இதனால் தொண்டு நிறுவனங்கள் தொடங்குவதற்கு கடுமையான சட்டங்களை தயார் செய்து அமுல்படுத்தியது.
அந்த சட்டத்தில் வருடந்தோறும் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்கு கணக்கும் அறிக்கையும் கேட்டிருந்தது மத்திய அரசு. அதை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
கணக்கு தாக்கல் செய்யாத விதிமுறைகள் கடைபிடிக்காத தொண்டு நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் சுமார் 14,800 தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாட்டும் 1,807 தொண்டுநிறுவனங்களை தடை செய்துள்ளது மத்திய அரசு.
இதில் முக்கியமாக கல்வி நிறுவனங்களை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை கொண்டு தொண்டு செய்யாமல் மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த பல தொண்டு நிறுவனங்கள் இதில் அடங்கும். மாவோயிஸ்ட், தேசத்திற்கு எதிராக செயல்படும் குழுவினருக்கு உதவும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலை தயார் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு